எ-டு: நன்றாய் + பேசினான்=நன்றாய்ப் பேசினான் போய் + சொன்னான்=போய்ச் சொன்னான் அன்றி + போகான்=அன்றிப் போகான் இன்றி + காணான்=இன்றிக் காணான் நன்றாக + பாடினான்=நன்றாகப் பாடினான் சொல்லென + சொன்னான்=சொல்லெனச் சொன்னான் குறுக + தறித்த குறள்=குறுகத் தறித்த குறள் ஆடி + கொண்டான்=ஆடிக் கொண்டான் வேற்றுமையில் வலிமிகுதல்: 12. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். கண்ணை + காட்டு=கண்ணைக் காட்டு என்னை+ பார்= என்னைப் பார் 13. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில், வல்லினம் மிகும். மலர் + கொடி=மலர்க்கொடி 14. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும். ஓலை + பெட்டி=ஒலைப் பெட்டி 15. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். வீட்டுக்கு + காவல்=வீட்டுக்குக் காவல் 16. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும். விழி + புனல்=விழிப்புனல் 17. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். வண்டு + கால்=வண்டுக்கால் 18. வன்றொடர்க் குற்றியலுகரத்தின்முன் அல்வழி, வேற்றுமை ஆகிய ஈரிடத்தும் வலி மிகும். இழுத்து + செல்=இழுத்துச் செல் ( அல்வழி) ஆற்று + புனல்=ஆற்றுப்புனல் (வேற்றுமை) |