பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

19. மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வல்லினம் மிகும்

நண்டு + கால்=நண்டுக்கால்

20. முற்றியலுகரத்தின் முன்னும் வேற்றுமையில் வல்லினம் மிகும்.

கதவு + தாள்=கதவுத் தாள்

அரவு + தோல்=அரவுத் தோல்

21. அரை, பாதி என்னும் சொற்களின்முன் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

அரை + பலம்=அரைப்பலம்

பாதி + பாக்கு=பாதிப் பாக்கு

22. தனிக்குற்றெழுத்தைத் தொடர்ந்து வரும் முற்றுகரத்தின் முன்னும், குறில் நெடில் இணைவின் முன்னும் வலிமிகும்.

நடு + பகல்=நடுப் பகல்

பலா + பழம்=பலாப் பழம்

23. மென்றொடர்க் குற்றியலுகரங்கள், வன்றொடர்க் குற்றியலு கரங்களாகத் திரிந்த வழி வருகின்ற வல்லினம் மிகும்.

இரும்பு + பாதை=இருப்புப் பாதை

குரங்கு + கால்=குரங்குக் கால்

24. ஐகாரச் சாரியைபெற்ற குற்றுகரங்கட்கு முன்னும் வலி மிகும்.

நேற்று +ஐ + பொழுது=நேற்றைப் பொழுது

25. அத்து, இற்றுச் சாரியைகளின் முன்னும் வல்லினம் மிகும்.

குன்றம் + அத்து + கோயில்=குன்றத்துக்கோயில்

மரம் + அத்து + கோடு=மரத்துக்கோடு

பது + இற்று + பத்து=பதிற்றுப் பத்து

வலிமிகா இடங்கள்:

1. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

நன்மை+ தீமை=நன்மை தீமை

அன்பு + பண்பு=அன்பு பண்பு