பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்181

2. வினைத் தொகையில் வல்லினம் மிகாது.

பாய் + புனல்=பாய்புனல்

செய் + தொழில்=செய் தொழில்

3. இரண்டாம் வேற்றுமைத் தொகை, ஆறாம் வேற்றுமைத் தொகை ஆகியவற்றில் வல்லினம் மிகாது.

நீர் + குடித்தாள்=நீர் குடித்தாள்

மகளிர் + கை=மகளிர் கை

4. மூன்றாம் வேற்றுமை விரி, ஆறாம் வேற்றுமை விரி ஆகியவற்றின் முன் வல்லினம் மிகாது.

கண்ணனொடு + சென்றேன்=கண்ணனொடு சென்றேன்

எனது + கை=எனது கை

5. எழுவாய்த் தொடர், விளித்தொடர், வினை முற்றுத் தொடர் ஆகியவற்றில் வலி மிகாது.

காக்கை + கரைந்து=காக்கை கரைந்தது

கண்ணா + கேள்=கண்ணா கேள்

ஓய்ந்தன + கைகள்=ஓய்ந்தன கைகள்

6. தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றிலும் வலி மிகாது.

வந்த + பையன்=வந்த பையன்

நல்ல + பையன்=நல்ல பையன்

கேளாத + கதை=கேளாத கதை

7. அது, இது, எது, ஏது, யாது; அவை, இவை, எவை, யாவை; அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகாது.

அது + பூனை=அது பூனை

இது + காக்கை= இதுகாக்கை

எது + பாட்டு=எது பாட்டு

ஏது + துணி= ஏது துணி?

யாது + கண்டாய்=யாது கண்டாய்

அவை + கழல்கள்=அவை கழல்கள்