2. பொதுப் பெயர் (தான்-தாம்-எல்லாம்) (பொதுப் பெயர்) சாத்தன்-சாத்தி இவற்றுள், ‘சாத்தன்’ என்ற முதற்பெயரை உயர்திணையில் ஆண் மகனுக்கும் பெயராக இட்டு வழங்கலாம்; அஃறிணையில் காளைக்கும் பெயராக இட்டு வழங்கலாம். ‘சாத்தி’ என்ற முதற் பெயரை உயர்திணையில் பெண் மகளுக்கும் பெயராக இட்டு வழங்கலாம்; அஃறிணையில் பசுவுக்குப் பெயராக இட்டு வழங் கலாம். எனவே, இவை இருதிணைப் பொதுப் பெயர்கள் எனப் படும். இங்ஙனமே, ‘முடவன்’, ‘முடத்தி’ என்ற சினைப் பெயர் களையும், ‘முடச்சாத்தன்’, ‘முடச்சாத்தி’ என்ற சினைமுதற் பெயர் களையும், ‘தந்தை’ ‘தாய்’ என்ற முறைப் பெயர்களையும், ‘எல்லாம்’ ‘தாம்’, ‘தான்’ என்ற பெயர்களையும் உயர்திணைக்கும், அஃறிணைக்கும் பொதுவாக வழங்கலாம். முதற்பெயர் நான்கும், சினைப்பெயர் நான்கும், சினைமுதற் பெயர் நான்கும், முறைப்பெயர் இரண்டும், தன்மைப் பெயர் நான்கும், முன்னிலைப் பெயர் ஐந்தும், எல்லாம், தாம், தான் என்பனவும், இவை போல்வன பிறவும் பொதுப் பெயர்களாகும் . இவற்றுள், ‘தான்’, ‘தாம்’, ‘எல்லாம்’, என்ற பொதுப் பெயர் களைப் பற்றி இனிக் காண்போம். (தான்) அவன்தான் சென்றான். அவள்தான் சென்றாள். அதுதான் சென்றது. மேற்கண்ட தொடர்களில் உள்ள ‘தான்’ என்பது பொதுப் பெயர்ச் சொல்லாகும். ‘அவன்தான் சென்றான்’, ‘அவள்தான் சென்றாள்’ என்ற தொடர்களில், ‘தான்’ என்பது உயர்திணை |