பக்கம் எண் :

20கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

ஒருமையில் வந்துள்ளது. ‘அதுதான் சென்றது’ என்ற தொடரில், ‘தான்’ என்பது அஃறிணை ஒருமையில் வந்துள்ளது. எனவே, ‘தான்’ என்பது இங்ஙனம் இருதிணைக்கும் பொதுவாக வந்தமையால் பொதுப்பெயர் எனப்படும்.

(தாம்)

அவர்தாம் சென்றனர்.

அவைதாம் சென்றன.

மேற்கண்ட தொடர்களில் உள்ள ‘தாம்’ என்பது பொதுப் பெயர்ச் சொல்லாகும். ‘அவர்தாம் சென்றனர்’ என்ற தொடரில், ‘தாம்’ என்பது உயர்திணைப் பன்மையில் வந்துள்ளது. ‘அவைதாம் சென்றன’ என்ற தொடரில், ‘தாம்’ என்பது அஃறிணைப் பன்மையில் வந்துள்ளது. எனவே, ‘தாம் ’ என்பது இங்ஙனம் இருதிணைக்கும் பொதுவாக வந்தமையால் பொதுப் பெயர் எனப்படும்.

(எல்லாம்)

அவர் எல்லாம் சென்றனர்.

அவை எல்லாம் சென்றன.

மேற்கண்ட தொடர்களில் உள்ள ‘எல்லாம்’ என்பது பொதுப் பெயர்ச் சொல்லாகும். ‘அவர் எல்லாம் சென்றனர்’ என்ற தொடரில் உள்ள ‘எல்லாம்’ என்பது, உயர்திணைப் பன்மையில் வந்துள்ளது. ‘அவை எல்லாம் சென்றன’ என்ற தொடரில் உள்ள ‘எல்லாம்’ என்பது, அஃறிணைப் பன்மையில் வந்துள்ளது. எனவே, ‘எல்லாம்’ என்பது இங்ஙனம் இருதிணைக் கும் பொதுவாக வந்தமையால் பொதுப்பெயர் எனப்படும்.

யாம் எல்லாம் வந்தோம்- (தன்மையிடம்)

நீர் எல்லாம் சென்றீர்- (முன்னிலையிடம்)

அவர் எல்லாம் வந்தனர்-

அவை எல்லாம் வந்தன-(படர்கையிடம்)