192 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
மாணவரின் கவிதைத் திறனை அறிந்த தியாகப்பிள்ளை பெரு மகிழ்வு கொண்டார். இவ்வாறு இருபது வயதுவரை வேதநாயகர் திரிசிரபுரத்திலேயே தங்கி கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றார். ஆ. மொழிபெயர்ப்புப் பணி வேலை ஏற்பு கல்வி கற்றுத் தேர்ந்த பின்னர் வேதநாயகர் ஏதேனும் அலுவல் புரிய விழைந்தார். அப்பொழுது திரிசிரபுரத்தில் இருந்த தென் மாநில நீதிமன்றத்தில் கார்டன் துரை என்பவர் நீதிபதியாக இருந்தார். ஆசிரியர் தியாகப் பிள்ளையின் முயற்சியால் கார்டன் துரையின் அலுவலகத்திலேயே வேத நாயகருக்கு வேலை கிடைத்தது. அலுவலகப் பத்திரங்கள், கணக்குப் புத்தகங்கள் இவற்றைக் காக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பெற்றது. வேத நாயகர் கடமை யுணர்ச்சி மிக்கவர்; ஆதலால், இளமையை வீணாக்காமல் சோம்பலின்றிப் பணி புரிந்து வந்தார். இவர் கூரிய மதி படைத்தவராதலின் பத்திரங்களையெல்லாம் செம்மையாகப் படித்து, அரசாங்க அலுவல், ஆட்சிமுறை முதலிய செய்திகளை நன்கு அறிந்து கொண்டார். இவர்தம் அயரா உழைப்பால் அனைவருடைய நல்லெண்ணத்தையும் பெற்றார். இவ்வாறாக இரண்டாண்டுகள் இவர் இப் பணியில் இருந்தார். கி.பி. 1850ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. இதனை யறிந்த பலரும் விண்ணப்பித்தனர். வேதநாயகரும் விண்ணப்பம் விடுத்தார். அப்பொழுது மாவட்ட நீதிபதியாக இருந்தவர் மேஸ்தர் பாய்லர் துரை என்பராவர். அவர் நடுநிலை யாளர்; விண்ணப்பித்த அனைவரையும் அழைத்தார். தமிழை ஆங்கிலத் திலும் ஆங்கிலத்தைத் தமிழிலும் மொழி பெயர்க்கப் பணித்தார். அனைவருடைய மொழிபெயர்ப்புகளையும் படித் தறிந்த அவர், வேதநாயகருடைய மொழி பெயர்ப்பே சிறந்து விளங்குகிற தென்று முடிவு செய்து, அம் மொழிபெயர்ப்பு வேலையை இவருக்கே தந்தார். வேதநாயகர் மகிழ்ச்சியுடன் அப் பணியினை மேற் கொண்டார். நற்பண்புகளுக்கு உறைவிடமாக இவர் விளங்கிய காரணத்தால், அப் பணி மக்களுக்குப் பணியாற்ற ஒரு வாய்ப்பாகும் என்று கருதி, அதனைத் தொடர்ந்தார். அக் காலத்தில் ஆங்கிலேயர் நாடாண்டு வந்தமையால் சட்டங்களும் ஆணைகளும் ஆங்கில |