பக்கம் எண் :

194கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

வேதநாயகர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத் தையும் நன்முறையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, மேஸ்தர் டேவிட்சனிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டு அனுப்புவதற்காக வைத்திருந்தார். இச் சமயத்தில் அரசியலார் டேவிட்சனை வேற்றூருக்கு மாற்றி விட்டனர். விடைபெற்றுச் சென்ற டேவிட் சன் சமயப்பூசல் தொடர்பான மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் தம்முடன் எடுத்துச் சென்றார்; ஊருக்குப் போனதும் அனைத்திலும் கையெழுத்திட்டு மேலிடத்திற்கு அனுப்புவதாகத் தெரிவித்திருந்தார். சென்ற இடத்திலே எதிர்பாரா வகையில் டேவிட்சன் இறந்து விட்டார். அதனால் மொழி பெயர்ப்புக் கட்டுகள் மேலிடத்திற்கு அனுப்பப் படாமல் டேவிட்சன் பெட்டிக்குள் சிக்கிவிட்டன.

டேவிட்சனுக்குப் பிறகு கிரீன்வே என்பவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் உயர் குணங்கள் இல்லாதவர்; உண்மையையும் உழைப்பையும் மதியாதவர். இச் சமயத்தில் மாநில நீதி மன்றத்தில் அக்கலக வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுது மாவட்ட நீதி மன்றத்திலிருந்து மொழிபெயர்தப்புக் கட்டுகள் வாராமை கண்டு, காலத் தாழ்விற்குக் காரணம் என்ன என்று மேலிடத் தார் எழுத்து மூலம் கேட்டனர். மேலிடத்தினின்று கேட்டு வந்ததை வைத்துக் கொண்டு. கிரீன்வே எவ்வித விசாரணையு மின்றி வேதநாயகர் மீது குற்றஞ் சுமத்தி, அவரை வேலையிலிருந்து விலக்கிவிட்டார். வேதநாயகர் அவற்றை மொழி பெயர்க்கவில்லையென்றும் அதனால் காலத் தாழ்வு ஏற்பட்ட தென்றும், ஆதலினால் அவரை வேலையிருந்து விலக்கிவிட நேரிட்ட தென்றும் கிரீன்வே மேலிடத்துக்கு எழுதியனுப்பி விட்டார்.

வேலை போனதைபற்றி வேதநாயகர் வேதனைப்பட வில்லை. அதைப் பெரிதாக எண்ணியிருந்தால் அல்லவா இவர் கவலைப்படுவார்?

‘இந்தஉத்தி யோகமென்ன பெரிதா? - நெஞ்சே!
இதுபோனால் நாம்பிழைப்ப தரிதா?’

என்று பாடிச் செம்மாந்திருந்தார். ஆயினும் வீண்பழிக் கன்றோ ஆளானோம் என்ற கவலையால் இவர் நோய்வாய்ப் பட்டார்; அதனால் உண்மை நிலையை மேலிடத்ற்குத் தெரிவித்