தாக வேண்டும் என்று எண்ணினார்; நடந்தவற்றை யெல்லாம் விளக்கி எழுதி அனுப்பினார். அதே சமயம் டேவிட்சன் பெட்டியில் இருந்த மொழிபெயர்ப்புக் கட்டு உயர்நீதி மன்றத்தார்க்கு வந்து சேர்ந்தது உண்மை உணர்ந்த உயர்நீதி மன்றத்தார் வேத நாயகரை வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தனர். இச் சமயத்தில் சுவிண்டன் என்பார் மாவட்ட நீதிபதியாக இருந்தார். இவரும் கிரீன்வேயைப் போன்ற இயல்புடைய வராக இருந்தமையால் அவ் வாணையை மதிக்கவில்லை. வேதநாயகர் பிணியாளர் என்றும், வேறொரு வரைக்கொண்டே மொழி பெயர்த்து எழுதுகிறார் என்றும் சுவிண்டன் மேலதிகாரிக்கு எழுதியனுப்பினார். உண்மையைப் புரிந்துகொண்ட மேலதிகாரி. சுவிண்டனை இலண்டனுக்கு அனுப்பிவிட்டு ஆரிஸ் என்பவரை நீதிபதியாக நியமித்தார். ஆரிஸ் நல்லியல்புகள் மிக்கவர். அதனால் அவர் நீதிபதியாக வந்தவுடன் வேதநாயகரை வேலையில் அமர்த்தினார். பழி துடைக்கப்பட்ட வேதநாயகர் மீண்டும் அப்பணியை ஏற்றுக்கொண்டார். இவர்பால் நேர்மையும் தமிழுணர்வும் மிக்கிருந்தமையால், பெரியோர் பலர் இவருக்கு நண்பராயினர். அவருள் மகாவித்து வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் ஒருவராவார். வேலை நேரங்களில் செம்மையாகச் செயலாற்று வதும், ஏனைய நேரங்களில் மகாவித்துவானுடன் உரையாடி மகிழ்வதுமாக வேதநாயகர் வாழ்த்துவந்தார். இ.நீதிநாயகர் நீதிபதியாதல் வேதநாயகர்க்கு இயல்பாகவே தமிழ் நெஞ்சம் வாய்த் திருந்தது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் போன்ற மேலும் மேலும் தமிழுணர்வு இவரிடம் வளர்வதாயிற்று. அதனால் இவர் தாம் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணியை விட இலக்கியப் பணியிலேயே நாட்டம் மிகுந்து காணப்பட்டார், அதனால் சிறந்த நூல்களைக் கற்பதும், புதிய பாடல்களை இயற்றுவதும், தமிழுக்குப் புதுமை கூட்ட வேண்டுமென்று சிந்திப்பதும் இவருடைய தலையாய கடமைகளாக இருந்தன. இச்சமயத்தில் மாயூரத்தையடுத்துள்ள தரங்கம்பாடி என்னும் ஊரில் மாவட்ட நீதிபதிப் பதவி ஒன்றுக்கு ஆள் வேண்டியிருந்தது. இப் பதவிக்கென அறுபதுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. |