196 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
நீதியிலும் நேர்மையிலும் நம்பிக் கையுடைய வேதநாயகரும் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அரசினர் வேதநாயகரையே தேர்ந்தெடுத்து மாவட்ட நீதிபதியாக அமர்த்தினர். அப்பதவியை ஏற்றுக்கொண்ட வேதநாயகர், ஆங்கிலமும் தமிழும் அறிந்தவ ராதலின், நடுநிலைமை பிறழாமல் செம்மையுடன் பணியாற்றி வந்தார். பின்னர், வேதநாயகர் சீகாழி என்னும் ஊருக்கு மாற்றப் பட்டார். திருஞானசம்பந்தர் தோன்றிய அப் பெரும் பதியிலிருந்து இவர் தமது பணியைச் செம்மையுறச் செய்து வந்தார். பொய் வழக்குகள் தமது நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் இவர் மனம் வருந்துவார். வழக்குரைஞர்கள் பணம் ஒன்றையே குறியாகக் கொண்டு, தம் கட்சிக்காரருக்காக, மெய்யைப் பொய்யாகவும் பொய்யை மெய்யாவும் தம் பேச்சுத் திறனால் மாற்றிமாற்றிப் பேசுவதைக் கண்டபோ தெல்லாம் இவர் மனம் புண்படுவ துண்டு. ஏழை மக்கள் வழக்குரைஞர்களை அமர்த்தி வாதாட முடியாமல் துயர்ப்படுவதைக் கண்டு வேதநாயகர் வேதனை யடைந்த நாள்கள் பல. அதனால் வழக்குரைஞர்களின் வாதங் களையும் சாட்சி களையும் மட்டும் நம்பி வேதநாயகர் தீர்ப்புக் கூறுவதில்லை; பல வழிகளால் உண்மையைத் தெரிந்து கொண்டு நீதி வழங்குவார். நீதி மன்றத்திலே நிகழ்கின்ற இந்தக் கொடுமைகளை யெல்லாம் நினைந்துநினைந்து வருந்திப் பாடல்கள் பல பாடிப் பாடித் தம் மன வேதனையை இவர் குறைத்துக் கொள்வார். இப் பெருமகனார், ‘சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல்’ நின்று, நடுநிலை பிறழாமல் தீர்ப்பு வழங்கி வந்தமைக்கு ஒரு சான்று காணலாம் ஒரு சமயம் வாதியொருவன், இவருடைய நீதி மன்றத்திலே பொய் வழக்கொன்று தொடுத்தான் எதிரியின் பக்கந்தான் உண்மையிருந்தது. நீண்ட நாள் வழக்கு நடந்து வந்தது. கட்சிக் காரர் இருவர் சார்பிலும் எடுத்துக் கூறியவற்றை யெல்லாம் இவர் நன்கு கவனித்துக் கேட்டுக் கொண்டார். தீர்ப்புச் சொல்லும் நாள் நெருங்கியது. வாதி அஞ்சினான்; தன் வழக்கில் உண்மையில்லாத தால் தனக்குத் தோல்வி நேருமோ என்று கருதினான். இப்படிக் கருதிய வாதி, ஒருநாள் வேதநாயகருடைய வீட்டிற்கு வந்தான். வேதநாயகர் தம்முடைய வீடு தேடி வந்தவனை இன்முகங் காட்டி இனியன கூறி வரவேற்றார். வந்தவன் உண்மை முழுதும் கூறித் தன் பக்கம் வெற்றியேற் படும்படி தீர்ப்பு வழங்க வேண்டிக் கையூட்டாக |