(இலஞ்சம்) நூறு ரூபாயும் கொடுத்தான். வேதநாய கருக்கு ஒரே மகிழ்ச்சி; மறுநாள் தீர்ப்பு வழங்கு வதற்குத் தக்க சான்று கிடைத்துவிட்டதல்லவா? இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டார். வாதி விடைபெற்றுச் சென்றான். மறுநாள் நீதிமன்றம் தொடங்கியது. வாதி மகிழ்ச்சியுடன் வந்திருந்தான். நீதிபதி பேசத் தொடங்கினார். அனைவரும் இவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். ‘இந்த வழக்கில் உண்மையைக் கண்டுபிடிப்பது உள்ள படியே எனக்குக் கடினமாகத்தான் இருந்தது. நேற்றிரவு வாதி என் வீட்டிற்கு வந்து இலஞ்சம் கொடுத்தபோதுதான் எனக்கு உண்மை வெளிப்படையாகத் தெரிந்தது’ என்று கூறி, வாதி முதல் நாள் தம்மிடம் தந்த பணத்தையும் வேதநாயகர் எடுத்துக் காட்டினார். அப்போது நீதி மன்றமே நடுங்கி விட்டது. ‘ஆகவே, நீதியை எதிரிக்கும், மன்னிப்பை வாதிக்கும் அளிக்கிறேன்’ என்று இவர் தீர்ப்பு வழங்கி, அந்தப் பணத்தை எதிரிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப் பினார். இத் தீர்ப்பு நகர் முழுமையும் பரவியது. நீதிநாயகராகிய வேதநாயகரின் புகழும் எங்கும் பரவியது. நீதிநூல் படைத்தல் வேதநாயகர் மக்களிடம் காணப்படுகின்ற குற்றங்குறை களைக் காண நேர்ந்தபோ தெல்லாம் மனம் வருந்துவார். மக்கள் இவ்வாறு தீயவழிகளிற் சென்று மடிகின்றனரே! இவர்களை எவ்வாறு நல்வழியில் திருப்புவது? என்று அடிக்கடி சிந்தனை செய்துகொண்டே யிருப்பார். கவிஞருடைய சிந்தனை வெளிப்படு மானால், அது கவிதை வடிவிலே தான் வெளிப்படும், இவர் தம் காலத்திலே வாழ்ந்த மக்களுக் கேற்பப் பல அறநெறிகளை யமைத்துப் பாடல்களைப் பாடிவைத்தார். இச் சமயத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரும் உடனிருந்தால் பேருதவியாக இருக்குமே என்று இவர் கருதினார்; அதனால் மகாவித்துவான் அவர்களும் சீகாழியில் தங்குவதற் கேற்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். அடிக்கடி வேத நாயகரும் மகாவித்துவான் அவர்களும் கூடி, அறநெறிப் பாடல் களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பத்தொன் பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற வகையில், உயர்ந்த நெறிகளைப் புகட்டுகின்ற நானூறு பாடல்களை இவர் பாடி |