பக்கம் எண் :

பாடுங்குயில்கள்199

உயர்நீதி மன்றத்திற்கு நெல்சன் என்பவர் புதிய அதிகாரியாக வந்து சேர்ந்தார். கையூட்டுப் பெறும் கயவர் சிலர் நெல்சனை அணுகி வேதநாயகரைப் பற்றிப் பலவாறு பழி சுமத்தினர். நெல்சன் உயர்பண்புகள் இல்லாதவர்; ஆதலினால், பிறர் கூறிய கோள் முழுவதையும் நம்பி, வேத நாயகரைப் பற்றித் தவறான கருத்துக்கொண்டிருந்தார்; இவரை எப்படியும் வேலையிலிருந்து நீக்கி விடுவதென முடிவும் செய்துவிட்டார்.

ஒரு நாள் மாயூரம் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு உயர்நீதிமன்ற அதிகாரியாகிய நெல்சன் திடீரென ஆய்வு நடத்த வந்துசேர்ந்தார். அப்பொழுது வேதநாயகர் நோய்வாய்ப் பட்டிருந் தமையால், அலுவலகத்திற்கு வர இயலாமல், வீட்டில் படுத்திருந் தார். தவறான எண்ணத்துடன் வந்திருந்த நெல்சன், அலுவலகத்தில் சோதனை செய்து, சில குறைகளைக் குறித்துக் கொண்டு சென்றார்; சென்னைக்குச் சென்றதும் அக் குறைகளுக்குக் காரணங் கேட்டு எழுதியிருந்தார். வேதநாயகர் நெல்சனின் செயல் கண்டு மனம் வருந்தினர்; பின்பு அக்குறைகளுக்குத் தகுந்த காரணங்களை விளக்கி எழுதியனுப்பினார். ஆயினும் நெல்சனுக்கு அக் காரணங்கள் மன நிறைவைத் தரவில்லை. அதனால் வேத நாயகரை வேலையிலிருந்து விலக்குமாறு நெல்சன் மேலிடத்துக்கு எழுதி அனுப்பிவிட்டார்.

வேதநாயகர் நேர்மையாக நடந்தவர்; மக்களுக்குத் தொண்டுகள் பல புரிந்தவர்; தீய நெறிகளிலிருந்து மக்களை நன்னெறிக்குத் திருப்பவேண்டும் என்று அல்லும்பகலும் நினைத்துக்கொண்டேயிருந்தவர்; பதினாறு ஆண்டுகள் உண்மை ஊழியம் புரிந்தவர், இவையனைத்தும் மேலிடத்தார்க்கு நன்கு தெரியும். ஆயினும், வெள்ளையராகிய நெல்சன் எழுத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று மேலிடத்தார் எண்ணினார்; அதனால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளு
மாறு வேதநாயகருக்கே நேரில் எழுதிவிட்டனர்; வேதநாயகரின் நேர்மையை நன்கு அறிந்திருந்தமையால் ஒய்வு கால ஊதியம்
(Pension) இறுதிக்காலம் வரை இவர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தனர்.

மேலிடத்துலிருந்து வந்த கடிதத்தைப் படித்து விட்டு, வேதநாயகர் மனத்துக்குள் நகைத்துத் தாம் விலகிக்கொள்வதாக மேலிடத்துக்கு எழுதி அனுப்பிவிட்டார். ஓய்வுகால ஊதியம் கொடுக்க வேண்டா என்று நெல்சன் எழுதியும் மேலிடத்தார்