200 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
அதனை மதிக்கவில்லை; ஓய்வூதியம் இறுதிக் காலம்வரை கொடுத்துவந்தனர். கவிஞன் உள்ளம் என்றும் கட்டுப்பட்டுக் கிடப்பதை விரும்பவே விரும்பாது விடுதலைப் பறவையாக வாழவே விரும்பும். வேத நாயகரும் சிறந்த கவிஞராதலின், வேலையிலிருந்து விடுபட்டதைப் பற்றிக் கவலைப்பட வில்லை; அடிமைத்தளை அறுபட்டதாகவே கருதினார். அதனைப்பற்றி இவர் பாடியிருக்கும் பாடலே அதற்குச் சான்று பகரும்: ‘நீடும்எண் சாண்மெய்யை ஓர்சாண் உதரம்நிமித் தம்விற்று நாடும் அரசர் அடிமைஎன் றேமுன்பு நாம் கொடுத்த ஏடு கிழிபட்ட தன்றோஉத் யோகம் இழந்ததுவே’ என்று வேதநாயகர் அடிமைச் சீட்டுக் கிழிந்து போய்விட்ட தாகவே கருதி மகிழ்ந்து பாடுகிறார். வேதநாயகர் ஓய்வு பெற்ற பின்பு, மாயூர நகராட்சி மன்றத் தேர்தல் வந்தது, அவ்வூர் மக்கள் இவருடைய உயர்ந்த பண்புகளையெல்லாம் நன்குணர்ந்த காரணத்தால், பெருமக்கள் பலர் கூடி வேதநாயகரைத் தேர்ந்தெடுப்பதென முடிவு செய்தனர். அப் பெருமக்களின் முயற்சியால் வேதநாயகர் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட வேதநாயகர் மக்களுக்குத் தொண்டு செய்ய ஒரு வாய்ப்புக் கிட்டியது என்று அதனைக் கருதினார்; பொறுப்போடு கடமையாற்றினார்; நகருக்கு வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து, மக்கள் பாராட்டிப் புகழுமாறு நடந்துவந்தார். ஈ. சீரிய தொண்டுகள் பெண்ணுரிமை, சமயப் பொதுமை ஆகிய கொள்கை களைப் பொறுத்தவரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெரியா ராகிய திரு.வி.கலியாண சுந்தரனாரை இவருக்கு ஒப்பாகச் சொல்லாம். வழக்கங்களை அகற்ற வேண்டும் என்பதிலும், சர்வ சமய சமரசத்திலும் இராமலிங்க அடிகளுக்கு நிகராக இவரைச் சொல்லலாம். இத்தகைய பெருமகனார் ஆற்றிய தொண்டுகள் பலவாயினும் குறிப்பிடத்தக்க தொண்டுகளாக இரண்டைக் கூறலாம். ஒன்று சமுதாயக் தொண்டு; மற்றொன்று மொழித் தொண்டு. |