பக்கம் எண் :

பாடுங்குயில்கள்201

சமுதாயத் தொண்டு

பெண்மையை விடுத்து ஆண்மையும், ஆண்மையை விடுத்துப் பெண்மையும் உயர்வு பெற எண்ணினால் அச் சமுதாயம் உருப் பட்டு முன்னேற முடியாது. இரண்டு பண்புகளும் சரிநிகர் சமமாக முன்னேறினால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். சமுதாயம் முன்னேறக் கல்வி இன்றியமையாதது. அக் கல்வியை இருபாலாரும் கற்க வேண்டும் என்பது சான்றோர் முடிபு. பிற்காலத்தில் பெண்களுக்குக் கல்வி வேண்டுவதில்லை என்னும் ஒரு கருத்து நிலவிவந்தது. அதனால் பெண்கள் நூலறிவு பெற வழியின்றி, அடிமைகள்போல வாழும் நிலை ஏற்பட்டது.

இந் நிலையைக் கண்ட வேதநாயகர் மனம் நொந்து பெண்
கல்வி பரவ வேண்டுமென்று பாடுபட்டார்; தம் கருத்துகளை
யெல்லாம் பாடல் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் வெளிப்
படுத்தினார். ஆண்மக்களுக்கு மட்டும் கற்க வாய்ப்பளித்துப் பெண்
மக்களுக்குக் கல்வியளிக்க மறுப்பது, நம் உடலில் பாதியை அணி
செய்து, மற்றொரு பாதியை அணியின்றி விடுவதுபோன்ற தாகும். அஃதாவது சமுதாயத்தில் பாதி அழகு பெறும்; பாதி அழகு பெறாமல் போய்விடும் என்னும் கருத்தை இவர் வெளிப் படுத்தினார். பெண்
கல்விக் காகவும், இவர் ஆற்றிய தொண்டு, பிற்காலத் தமிழகத்திலே முதன்முதலாகச் செய்யப் பெற்ற சமூகச் சீர்திருத்தத் தொண்டாகும்; பெருந் தொண்டும் ஆகும்.

சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே இருத்தல் கூடாது என்று வேதநாயகர் கூறுகிறார். பிறக்கும்போதே மகுடத்துடன் பிறந்தவரும் இல்லை; அதனால் மேலோர் கீழோர் எனப் பேசுவது மடமை என்று இவர் பாடுகிறார். மற்றொரிடத்தில் செல்வச் செருக்கை நகைச்
சுவையாகவும் கடுமையாகவும் கண்டிக் கின்றார்; ‘செல்வர்கள் சிவப்புக்கல், வெள்ளைக்கல், நீலக்கல் என்று சேர்க்கிறார்கள். ஏழையரும் செங்கல், வெண்கல், கருங்கல் என்று சேர்க்கிறார்கள். ஏழைமக்கள் சேர்க்கும் கற்களுக்கே எடை அதிகம்; வலிமையும் அதிகம்’ என்று பாடுகிறார். இவ்வாறு செல்வத்தால் ஏற்றத்தாழ்வு இருத்தல் கூடாது என்னும் கருத்தை இவர் பல பாடல்களால் விவரிக்கின்றார்.

ஒருசமயம் தமிழ்நாட்டிலே பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அது, தாது வருடத்திலே ஏற்பட்டமையால், ‘தாது வருடப் பஞ்சம்’