பக்கம் எண் :

பாடுங்குயில்கள்209

துறையில் எவ்வளவு பேரறிவு படைத்திருந்தாரோ அந்த அளவிற்கு இலக்கிய இலக்கணங்களிலும் திறமை படைத்தவராக விளங்கினார். அவரிடம் கவிமணியும் வேறு சிலரும் தமிழ் கற்கத் தொடங்கினர். தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே தம்பிரானிடம் கவிமணி தமிழையும் நன்கு கற்றுவந்தார்.

தொடக்கப் பள்ளியில் படிப்பு முடிந்ததும் இவர் கோட்டாற்று ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படித்துவரலானார். இவர் தம் பத்தாம் வயதில் தந்தையாரை இழந்துவிட்டார்; அதனால் தாயாரின் மேற்பார்வையில் வளர்ந்துவந்தார். ஆங்கிலப் பள்ளியில் இவர் பயின்று வந்தபோதும், தம்பிரானிடம் சென்று தமிழ் கற்கத் தவறியதில்லை. அதனால், இவர் இலக்கியப் பயிற்சியும் இலக்கணப் பயிற்சியும் பெற்றுத் திகழ்ந்தார். பாடல்கள் வரலாற்றுக் குறிப்புகள் என்றால் இவர்க்குத் தனி விருப்பம் அப்பொழுதே இருந்து வந்தது. இவர் ஐந்தாண்டுகள் தமிழ் கற்றுச் சிறந்த புலமையும் பெற்றார். இளமைப் பருவத்திலேயே பாடல்கள் இயற்றும் ஆற்றலும் இவரிடம் அமைந்திருந்தது. சாந்தலிங்கத் தம்பிரானுக்குப் பிறகு, அம் மடத்தின் தலைவராகச் சங்கரலிங்கத் தம்பிரான் என்பவர் வந்துசேர்ந்தார். அவரிடத்தும் கவிமணி தொடர்ப்பு கொண்டிருந்தார். புதிய தம்பிரான் கவிமணியின் பாடல்களைக் கேட்கும்போ தெல்லாம் மகிழ்ச்சி அடைவார்; ‘நீ எதிர்காலத்தில் பெருமையுடன் விளங்குவாய்’ என்று வாழ்த்துக் கூறுவர்.

கவிதைப் பயிற்சி

ஒரு நாள் கவிமணியும் அவருடன் பயின்றவர்களும் மடத்துக்கு வந்தார்கள். அப்பொழுது தம்பிரானுக்கு அருகில் அப்பம், வடை முதலிய தின்பண்டங்கள் நிறைந்த தட்டொன்று இருந்தது. தம்பி ரான் அவற்றை அவர்களுக்குக் கொடுக்க எண்ணினார்; ஆயினும் ஒப்பித்தல் போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுபவர்க்குக் கொடுக்கக் கருதினார்; சிறுவர்களை அழைத்தார்; ‘நான் தேவாரப் பாடல் ஒன்றைப்பாடுவேன். பிறகு புத்தகத்தைப் பார்த்து, உங்களுள் ஒருவர் அதைப் படிக்கவேண்டும். அதன் பின்னர், மீண்டும் ஒரு முறை நான் பாடுவேன். இவ்வாறு மூன்று முறை கேட்ட அந்தப் பாடலை யார் பிழையில்லாமல் சொல்கின்றீர்களோ அவர்களுக்கு அப்பமோ, வடையோ கொடுக்கப்படும்’ என்று ஒரு போட்டி