210 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
வைத்தார். போட்டியில் கவிமணியே வெற்றி மேல் வெற்றி பெற்றார். தம்பிரானுக்குப் பக்கத்திலிருந்த அப்பம் வடையெல்லாம் கவிமணிக்கு முன்னால் வந்துசேர்ந்தன. உடனிருந்த மாணவர் களுக்குத் தோல்வியைப் பற்றி அவ்வளவு கவலையில்லை யென்றாலும், தின்பண்டங்கள் அவ்வளவும் போயினவே என்ற ஏக்கம் மிகுதியாக இருந்தது. இரக்கமும் அன்பும் கொண்ட கவிமணி அவற்றை எல்லார்க்கும் பகிர்ந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சியினால் கவிமணியின் நினைவாற்றல் புலப்படுகிறது. ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கவிமணி ஓர் அழகான பாடலை இயற்றினார். அது சிறந்த பாடல் என்று இவர் உணர்ந்தார்; ஆயினும், மற்றவர்கள் அதனை எப்படிக் கருதுகின்றார்கள் என்று அறிய ஆசைப் பட்டார்; அதனால், அந்தப் பாடலை ஒரு தாளில் எழுதித் தமிழாசிரியர் இருக்கைக்குப் பக்கத்தில் யாரும் அறியா வண்ணம் வைத்து விட்டார். அங்கு வந்த தமிழாசிரியர் அதனைக் கண்டார்; அதை எடுத்துப் படித்துப் பார்த்தார்; பாடல் மிகச் சிறந்த முறையில் அமைந்திருந்ததைக் கண்டு மிகுதியாகப் பாராட்டி, ‘யாருடைய பாடலென்று அறிய முடியவில்லையென்றாலும், சொல்லழகும் பொருளழகும் நிறைந்திருக்கிறது’ என்று வியந்து கூறினார். தம்முடைய பாடல் தம்முடைய ஆசிரியராலேயே பாராட்டப் பெறுவதைப் கேட்டுக் கொண்டிருந்த கவிமணி, மனத்துக்குள்ளேயே மகிழ்ந்துகொண்டார். அவ்வப்பொழுது கவிமணி, வேடிக்கையாகத் தம் கவித்திறன் வெளிப்படுமாறு, பாடல்களைத் தனித்தனியாகப் பாடிவந்தார். ஒருசமயம் தம்பிரான் வேண்டிக்கொண்டதற் கிணங்கத் தேரூர்ப் பெருங்குளத்தின் நடுவே கோவில்கொண்டிருக்கும் ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’ என்று அந் நூலுக்குப் பெயர் வைத்தார். அப் பாடல்களில் பத்திச் சுவை, இனிமை, கனிவு, கற்பனை யாவும் விளங்கும். பின்னர் இவர் தம்முடைய குலதெய்வமாகிய அழகிய மணவாள விநாயகர்மீதும், சுசீந்திரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் மீதும் பாடல்கள் பல பாடினார். ஆராய்ச்சி மனப்பான்மை கவிமணிக்கு இளமையிலேயே, எதையும் ஆராய்ந்து பார்க் கின்ற ஆர்வம் இயல்பாக அமைந்திருந்தது. இந்த ஆர்வம் தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சியிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் |