இவரை ஈடுபடுத்தியது. அரசுக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையில் கணேசப் பிள்ளை என்பவர் பணியாற்றி வந்தார். அவர் திருவனந்த புரத்தில் தங்கியிருந்தாலும், அடிக்கடி தேரூருக்கு வருவார். வாய்ப்புக் கிட்டியது. அவருடைய தொடர்பு கவிமணியின் ஆராய்ச்சி ஆர்வத்தை வளரச் செய்தது. சுங்கான்கடை என்னும் இடத்துக்கு அருகில் பழங்கோட்டை ஒன்று இருந்தது என்று ஆராய்ந்து, அதற்குரிய சான்றுகளும் தொகுத்து எழுதிவைத்திருந்தார் கணேசப் பிள்ளை. அவர் எழுதிவைத்திருந்த அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை, அவர் அறியாவண்ணம் காணும் வாய்ப்பைக் கவிமணி பெற்றார். அக் கருத்தை மறுத்துத் தகுந்த சான்றுகளும் காட்டி, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றினை எழுதி, ‘திருவாங்கூர் டைம்ஸ்’ என்னும் ஆங்கில இதழில் இவர் வெளியிட்டார். இக் கட்டுரையைப் படித்துப் பார்த்த கணேசப் பிள்ளை திகைத்துப் போனார். வெளியிடப்பட்டுள்ள தென்னிந்தியக் கல்வெட்டுகள் அனைத்தையுமே கவிமணி கற்றுத் தெளிந்துவைத்திருந்தார்; இவற்றைப் படித்து, நிறைந்த செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தார்; அதன் பயனாகக் ‘காந்தளூர்ச்சாலை’ என்னும் ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அந் நூலில் இவருடைய ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் வெளிப்பட்டன. இவர் தொகுத்து வைத்திருந்த மொழியாராய்ச்சிக் குறிப்புகளும், இலக்கண ஆராய்ச்சிக் குறிப்புகளும், கல்வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளும் பலருக்குப் பெரிதும் பயன்பட்டன. தவறான ஆராய்ச்சிகள் வெளிவந்தால், அவற்றிற்குத் தகுந்த சான்றுகாட்டி இவர் மறுப்புரைகள் எழுதுவதுண்டு; நூற்பதிப்புகளில் பிழைகள் காணப்படும் பொழுது, அவற்றைத் திருத்திக்கொள்ளு மாறு காரணங்காட்டிப் பதிப்பாசிரியர்க்கு எழுதுவார். ஆ.ஆசிரியர் பணி திருமணம் கவிமணி ஆங்கிலப் பள்ளியில் பயிலும் பொழுதே கவிதை எழுதுதல், ஆராய்ச்சிக் கட்டுரை வரைதல் போன்ற துறைகளில் ஆர்வங் காட்டியபோதிலும், படிப்பில் கருத்துடனேயே இருந்து |