பக்கம் எண் :

பாடுங்குயில்கள்213

பதவி உயர்வு

குழந்தைகளின் மனப் பாங்கறிந்து கற்பித்து வரும் கவிமணியின் சிறப்பு, நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. இதனை யறிந்த அரசினர், இவரைக் கோட்டாற்றிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஓர் ஆசிரியராக நியமித்தனர். இத் தொழிலுக்குப் பெரிதும் தகுதியுடைய வராக இருந்தமையால் அங்கும் இவர் சிறந்து விளங்கினார்; அதன் பின்னர், திருவனந்தபுரத்திலுள்ள மகளிர்க் கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு மாற்றம் பெற்றார். அங்கே பணியாற்றி வந்த பொழுது, இவருடைய தமிழ்ப் புலமையறிந்த அரசினர், திருவனந்த புரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இவரைத் தமிழா சிரியராக அமர்த்தினர். சில ஆண்டுகளுக்குப்பின், இவர் மகளிர் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராக மாற்றப்பட்டார். ஓய்வு பெறும் வரை இப்பதவியிலேயே தொடர்ந்து பணியாற்றிவந்தார்.

கல்லூரியில் பணியாற்றி வந்தபொழுது, கல்லூரித் தலைவியாக இருந்த அம்மையார், இவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்; தம் உடன் பிறந்தவரைப்போலக் கருதிக் கல்லூரித் தொடர்புள்ள எச் செயலையும், இவருடன் கலந்து பேசிச் செய்துவந்தார்; பல பொறுப்புகளையும் இவரிடம் ஒப்படைத் திருந்தார்.

இவர் மற்ற ஆசிரியர்களின் அன்பையும் நன் மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார். மாணவிகளுக்கு இவர் கற்பித்த முறை தனித்தன்மை வாய்ந்தது; பாடல்களைத் திணிக்காமல், மாணவி யரிடம் அமைந்திருக்கும் அறிவொளியைத் துலக்கமுறச் செய்யும் ஒரு தூண்டுகோலாகவே இவர் விளங்கினார். அன்புடன் எதனையும் இவர் உணர்த்தி வந்தமையால், மாணவியரும் இவரைத் தநதை போல் எண்ணி இவரிடம் பெருமதிப்புடன் நடந்து வந்தனர். இவர் ஐம்பத்து மூனற் வயதுவரை பணியாற்றி வந்தார்.

கவிமணி தன்மான உணர்வும் தன்னம்பிகையும் உடையவராக வாழ்ந்து வந்தார்; தம் பதவி உயர்வுக்காகவோ வேறு காரணங் களுக்காகவோ எவரையும் கெஞ்சி நிற்கமாட்டார். அடக்கமும் பணிவும் உடையவராக இருந்தாலும் இவர் தன் மதிப்பு மிக்க வராகவே வாழ்ந்தார்; பெருமிதத்துடனேயே இறுதிவரை திகழ்ந்தார். உயர்நிலைப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரவேண்டு மென்று இவர்