பக்கம் எண் :

214கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

விரும்பவில்லை. இவருடைய தமிழ்ப் புலமையை அறிந்து கொண்ட கல்லூரித் தலைவியின் முயற்சியினாலேயே இவர் கல்லூரிக்கு வந்தார்.

இவரைப் பேராசிரியராக்கக் கல்லூரித் தலைவிமுயன்று கொண்டிருந்தபோது, கல்வித்துறைத் தலைவர், கவிமணியின் தகுதியைக் காட்டும் சான்றிதழ் ஒன்று தேவை என்றார். இதனை யறிந்த கவிமணி, ‘என் தகுதியைக் காட்டச் சான்றிதழுக் காக எவரிடமும் சென்று நிற்கவும் வேண்டா; எனக்குப் பதவி உயர்வும் வேண்டா’ என்று கூறிவிட்டார். இவருடைய இயல்பையும் திறமையையும் நன்கு தெரிந்திருந்த கல்லூரித் தலைவி, தாமே கல்வித்துறைத் தலைவரைக் கண்டு பரிந்துரை செய்து, அவ் வேலை கிடைக்குமாறு செய்தார். எனினும், அப் பதவியை ஏற்கக் கவிமணி ஒருப்பட்டிலர்; ஓய்வுபெற மேலும் இரண்டாண்டுகள் இருந்தும், முன்பாகத் தாமே விலகிக்கொண்டார்.

இ.கவிமணியின் நூல்கள்

கவிமணி தமிழ்நாட்டிற்குப் படைத்துக் கொடுத்த நூல்களை மூன்று வகையாகக் கொள்ளலாம். ஒன்று கவிதை நூல்கள்; மற்றொன்று இசைப் பாடல்கள்; மூன்றாவது உரைநடை நூல்கள். ‘மலரும் மாலையும்,’ ‘ஆசிய ஜோதி,’ ‘உமார் கயாம் பாடல்கள்,’ ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ என்பன கவிதை நூல்கள். ‘தேவியின் கீர்த்தனங்கள்’ இசைப் பாடல்களால் ஆன நூல். ‘கவிமணியின் உரைமணிகள்,’ ‘காந்தளூர்சாலை’ என்பன உரை நடை நூல்கள். இவற்றுள் ‘காந்தளூர்ச்சாலை’ வரலாற்று அடிப் படையில் எழுந்த ஆராய்ச்சி நூல். இஃது ஆங்கிலத்தில் அமைந்தது; இதுவேபோன்ற இவர் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரைகள் பல இன்னும் நூல் வடிவம் பெறவில்லை.

கவிதை நூல்கள்

மலரும் மாலையும் என்பது கவிமணி பல்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல். பதிப்பு பாமலர்களை முதலிலும் கதம்பப் பாமலர்களை இறுதியிலும் கொண்டு இலக்கியமணம் கமழ்வது இம் மாலை. வெண்ணிலா, கடல், மலர்கள் போன்ற இயற்கைப் பொருள் களைப்பற்றிப் பாடிய பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பசு, பொம்மைக்