218 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
எளிமை வாழ்வு எவரேனும் தம்பால் வந்து, பிறரைப்பற்றிக் குறைகள் சொன்னால், அவற்றைச் செவிகொடுத்துக் கேட்கமாட்டார்; தாமும் பிறரைப்பற்றி அவர் கண்டால் நேரிலேயே அன்பாக எடுத்துச்சொல்லி, அவரைத் திருத்துவார். வெளிப்பகட்டை இவர் ஒரு சிறிதும் விரும்பியதில்லை; எல்லாவற்றிலும் எளிமையையே விரும்பினார். ஆடையில் எளிமை, தோற்றத்தில் எளிமை, பேச்சில் எளிமை, எழுத்தில் எளிமை, பழகுவதில் எளிமை அனைத்திலுமே எளிமைதான். இவரிடத்தில் எளிமை குடிகொண்டிருந்தமையால், ஆடம் பரத்தை விரும்பவில்லை; ஆடம்பரத்தை விரும்பா மையால் புகழையும் விரும்பவில்லை. புகழை விரும்பாத காரணத்தால் இவரைப் பாராட்டப் பலர் அழைத்தும் இவர் செல்லவில்லை; ஆயினும், தவிர்க்கமுடியாத சில இடங் களுக்கே சென்று வந்தார். யார் புகழை வெறுத்து ஒதுக்குகிறார்களோ, அவர்களைப் புகழ் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே யிருக்கும். புகழ் அவர்களைவிட்டு விலகவே விலகாது. தன்னை வெறுத்து ஒதுக்கிய கவிமணியைப் புகழ் சூழ்ந்து கொண்டேயிருந்தது. உயர்பண்பு சுற்றுச்சூழலை அறிந்து நடந்துகொள்ளும் பண்பும் இவரிடம் இருந்தது. ஒரு சமயம் திருமண விருந்து ஒன்றில் இவர் கலந்து கொள்ள நேர்ந்தது. அங்கே கூட்டம் மிகுதியாக இருந்தது. அனைவரும் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு களிப்பில் மூழ்க்கி யிருந்தனர். அப்பொழுது இவருக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் பிரித்துப் பார்க்காமலே சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்; ஏனெனில், அது வருத்தம் தருஞ் செய்தியாக இருந்தால், மகிழ்ச்சி யுடன் இருக்கும் அனைவரும் வருந்துவரே என்று கருதி அவ்வாறு செய்தார். அன்று மாலை வரை இவர் அதைத் தொடவேயில்லை; எல்லாரும் கலைந்து சென்ற பிறகு அதைப் படித்துப் பார்த்தார். உண்மைமயில் அது வருத்தம் தருஞ் செய்தியாகவே இருந்தது. இவருடைய மருமகள் இறந்துவிட்ட தாகச் செய்தி வந்திருந்தது. கவிமணி, இத்தகைய உயரிய நல்லியல்புகளுக்கு உறை விடமாக விளங்கி வந்தமையால், உயர்ந்த மனிதராக முடிந்தது. |