உ. மணிக்குயில் தேசிகவிநாயகம் தேசிகவிநாயகத்தின் கவிமணம் தமிழ் நாடெங்கும் பரவியது. கவிமணத்தை நுகர்ந்து மகிழ்ந்த தமிழ் நெஞ்சங்கள் இவரைக் கண்டு மகிழவும், போற்றிப் பாராட்டவும் துடித்துக் கொண்டி ருந்தன. ‘எங்கள் ஊருக்கு வருக, எங்கள் ஊருக்கு வருக’ என்று அழைப்பு வந்தவண்ணமாகவே இருந்தது. இவர்தாம் புகழை விரும்பாத புண்ணியராயிற்றே! ‘இயலாது’ என்று இவர் எழுதி விடுவார். என்றாலும் அன்பை வெல்ல முடியுமா? அன்புக் காகக் கட்டுப்பட்டுத் தவிர்க்க முடியாமல் சில பாராட்டுகளை இவர் ஏற்றுக்கொண்டார். கவிமணி முதன்முதலாகக் கவிஞர் பெருமான் தேசிகவிநாயத்தைப் பாராட்டிய பெருமை சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தையே சாரும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு, டிசம்பர் மாதம், இருபத்து நான்காம் நாள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவுக்குத் தலைமை தாங்கியவர். தமிழவேள் உமாமகேசு வரனார் ஆவர். அவர் தேசிகவிநாயகத்தின் அருமை பெருமை களையும் கவிதைச் சிறப்பையும் பாராட்டிப் பேசிக் ‘கவிமணி’ என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவருடைய இயற்பெயர் சுருங்கிக் கவிமணி என்னும் பெயரே மேலோங்கியது. கவிமணி என்று பாராட்டப்பெற்ற இந்த மணிக்குயில். இனிய கீதங்களைப் பாடிப்பாடி நம்மை மகிழ்வித்துக் கொண்டேயிருந்தது. கவிமணி எவ்வளவுக் கெவ்வளவு புகழை வெறுத்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு புகழ் இவரை விரும்பியது. கவிமணிப் பட்டம் பெற்ற பிறகு நாளுக்கு நாள் இவர் தம் புகழ் வளரலாயிற்று. கவிமணியின் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த பாராட்டு என்று சொன்னால், அஃது ஆத்தங்குடியில் நடந்த பாராட்டாகத்தான் இருக்க முடியும். பாராட்டுகள் கவிமணியின் பாடல்களைத் தமிழ் நாட்டிற்கு முதன் முதல் அறிமுகஞ்செய்துவைத்த பெருமை, ‘குமரன்’ என்னும் இதழை நடத்தி வந்த தமிழறிஞர் சொ.முருகப்பனாரையே சாரும். அவருடைய முயற்சியாலேயே ஆத்தங்குடியில் பாராட்டுக்கு |