222 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
3. விடுதலைக்குயில் பாரதியார் (கி.பி. 1882 - 1921) தோற்றுவாய் ‘நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதும் சோரா திருத்தல்’- எனக் கவிதையை உயிர்மூச்சாகக் கொண்டு கடைசி மூச்சு உள்ளவரை நாட்டிற்கே உழைத்து நொடிப்பொழுதும் சோர்வின்றி வாழ்ந்தவர் எவரேனும் உளரோ என்றால், அவர்தாம் பாவலர் சி.சுப்பிரமணிய பாராதியார். பெற்றோர் தேன் இருக்கும் சோலை சூழ்கின்ற தென் இளசை நகராகும் எட்டையபுரம். அங்குச் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து, எட்டையபுர அரண்மனையில் பணியாற்றி, அவைப் புலவராய் விற்றிருந்து புகழ் பெற்றவர் சு.சின்னசாமி ஐயர் ஆவர். அவர், அன்னை மொழியாகிய தமிழை ஆய்ந்துணர்ந்தவர்; தாமே முயன்று ஆங்கிலம் கற்றவர்; மேலைநாடுக் கணக்கியல் முறையிலும் ஓரளவு வல்லவர். அவரது நுண்ணறிவும் நாவன் மையும் அவர்பால் அனைவரையும் அன்பு கொள்ளச் செய்தன. அதுபோலவே அவருடைய பெருங்குணமும், பரந்தமனமும் அவர்பால் அனைவருடைய நன்மதிப்பையும் நட்பையும் உரிமையாக்கின. சின்னசாமி ஐயர், உறவு முறையிலே இலக்குமி என்னும் நங்கையைத் திருமணம் செய்து கொண்டார். பெயருக்கேற்ற பேரழகுகொண்ட அவ்வம்யைhர் அருங்குணங்கள் பலவும் ஒருங்கு பெற்றவர் ஆவார். அவர்கள் இருவரும் கருத்து ஒருமித்த இல்லற |