வாழ்க்கை நடத்தினர்; அதன் பயனாக ஆண்மகவு ஒன்றை ஈன்றனர். அறிவறிந்த அம் மகன் 11-12-1882 ஆம் ஆண்டு பிறந்தான். பெற்றோர் மகனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாலும், அனைவரும் செல்லமாகச் சுப்பையா என்றே அழைத்தனர். சுப்பையாவே பிற்காலத்தில் பாடுங்குயில் சுப்பிரமணிய பாரதியாராக ஆனார். அ.இளமை வாழ்வு கல்வி சுப்பையா குழலும் யாழும் நாண மழலை மொழி பேசினான்; சிறுகையை நீட்டிக் குறுகுறு நடந்தான்; இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை உணவை மெய்பட விதிர்த்தும் தம் பெற்றோரை மயக்கினான். காலம் கடந்தது; சுப்பையாவுக்கு ஐந்தாம் ஆண்டு நடந்தது. அறிவும் அழகும் செறிந்த பாரதியார்க்கு அவர் தந்தையார் முதற்கண் எழுத்தறிவித்தார்; சிறுசிறு தமிழ்ச் செய்யுள் நூல் களையும் கற்றுக் கொடுத்தார்; ஆங்கில எழுத்துகளையும் அறிமுகப் படுத்தினார். பாரதியாரும் தமிழ்ப் பாடங்களை மனத்தில் பதித்துக் கொண்டார்; தமிழ்ப் பாடல்களைத் தம் அமுதக் குரல்கொண்டு பாடிப் பழகினார். குலவித்தை கல்லாமல் பாகம் படுமன்றோ! ஆதலின் தந்தையின் தமிழறிவு முந்தி வந்து பாரதி யாரைச் சேர்ந்தது. தந்தையார் உரிய காலத்தில் பாரதியாரைப் பள்ளியிற் சேர்த்தார். பாரதியார் பள்ளியில் தமிழில் தனிக் கருத்துச் செலுத்தினார். தேர்வுக் காலங்களில் தமிழில் முதல் மதிப்பெண்ணும் இவர் பெற்று. ஒவ்வோர் ஆண்டிலும் வெற்றி பெற்றுவந்தார். இச் செயல் ஆசிரியர் எல்லார்க்கும் வியப்பைத் தந்தது. தொடக்கக் கல்வி நிறைவெய்திய பின்னர்ப் பாரதியார் திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பள்ளியிலே சேர்க்கப்பெற்றார் கல்வியில் இருவருடைய கருத்தூன்றவில்லை. அக் கல்வி முறை இவரைக் கவரவில்லை. அதனைப் பற்றி இவரே பிற்காலத்தில் மனம் வெறுத்துப் பாடியுள்ளார். |