பக்கம் எண் :

234கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

ஆங்கில அரசின் புலனாய்வு

தமிழ்நாட்டில் விடுதலைத்தீ வீறிட்டெழுந்தது. வாஞ்சி என்னும் விடுதலை வீரர் மணியாச்சிப் புகைவண்டி நிலையத்தில் திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சித் தலைவர் (கலெக்டர்) ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தாமும் சுட்டுக்கொண்டு இறந்தார். கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டது. அக் கொலைக்கு உடந்தையானவர்களுள் இருவர் புதுவைக்குப் போய்விட்டதாகக் காவல்துறையினருக்குச் செய்தி கிடைத்தது.

பிரஞ்சு அரசைக் சென்னைக் காவல் துறையினர் நாடினர்; புதுவை அரசின் உயர் அதிகாரிகள் இருவர் துணையுடன் புலனாய்வில் இறங்கினர். மறு நாள் புதுவை நீதிமன்றத்தில் புலனாய்வு செய்த புதுவை அதிகாரியின் குறிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பின்னர் அரவிந்தர், பாரதியார். வ.வெ.சு.ஐயர் ஆகிய மூவரும் பெரிய இலக்கிய மேதைகள் என்றும், இவர்களுக்கும் ஆஷ் துரை கொலைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்புச் செய்தது. அம் முடிவைப் புதுவை அரசு சென்னை அரசுக்குத் தெரிவித்துவிட்டது.

புகழ் பரவியது

புதுவையில் வாழ்ந்துகொண்டிருந்தபோதே பாரதியார் கி.பி.1909இல் ‘ஜன்மபூமி’ என்னும் பெயரில் தம் சுதேச கீதங்கள் நூலாக்கி வெளியிட்டார். அடுத்து ‘நாட்டுப் பாட்டு’ என்னும் பெயரில் பாரதியார் கவிதைகளை முதற் பதிப்பாகப் பரவி. சு.நெல்லையப்பர் வெளியிட்டார் அவர் பாரதியாரின் நண்பர்; பாரதியாரின் கவிதைகளை நூல் வடிவில் கொணர அரும் பாடுபட்டவர். கி.பி. 1917.இல் பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ நூலை வெளியிட்டவர் அவரே. கவிதை வெளியீடுகளால் பாரதியாரின் புகழ் எங்கும் பரவியது. அந்நாளில் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், ‘வாழும் மிகப் பெரிய கவிஞர்’ என்னும் தலைப்பில் பாரதியாரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். இதனால் ஆங்கில நாட்டிலும் இவர் புகழ் பரவியது.

புதுவையிலிருந்து புறப்பாடு

புகழ்கொண்ட பாரதியார் புதுவையில் ஏறக்குறையப் பதினோராண்டுகள் வாழ்ந்துவிட்டார். புதுவை வாழ்வு இவருக்குக் கசந்துவிட்டது; பாடித்திரியும் அந்த விடுதலைக் குயில் புதுவை