பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்25

இங்ஙனம் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும், ஒருமை பன்மைக்கம் பொதுவாக வரும் வினைச்சொற்களும், முக்காலங் களுக்கும், தன் வினை பிறவினைக்கும், உடன்பாட்டு வினை எதிர் மறைவினைக்கும், செய்வினை செயப்பாட்டு வினைக்கும், பெய ரெச்சம் வினையெச்சத்திற்கும் பொதுவாக வரும் வினைச் சொற்களும் பொதுவினைகள் எனப்படும்.

தன்மை ஒருமை வினைமுற்றுக்களும், தன்மைப் பன்மை வினைமுற்றுக்களும், முன்னிலை ஒருமை வினைமுற்றுக்களும், வியங்கோள் வினைமுற்றுக்களும், வேறு-இல்லை-உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றுக்களும், பெயரெச்சங் களும், வினை யெச்சங்களும், செய்யும் என்னும் முற்றும், யார், எவன் என்னும் வினாவினைக்குறிப்பு முற்றுக்களும், மேலும் சில வினைச் சொற்களும் பொது வினைகளாக வரும்.

இனி, அவற்றைப்பற்றி விரிவாகக் காண்போம்.

(தன்மை ஒருமை வினைமுற்றுக்கள்)

(இருதிணைப் பொதுவினை)

யான் உண்டு (உண்டேன்)
யான் வந்து (வந்தேன்)இறந்தகாலம்
யான் சென்று (சென்றேன்)

யான் உண்கு (உண்பேன்)
யான் வருது (வருவேன்)எதிர்காலம்
யான் சேறு (செல்வேன்)

இங்கே, ‘கு-டு-து-று’ என்னும் குற்றியலுகர விகுதிகளை ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன.

யான் உண்பல் (உண்+ப்+அல்) உண்பேன்.

இங்கு, ‘அல்’ என்னம் விகுதியை ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொல், எதிர்கலத்தில் இருதிணi பொதுவினையாக வந்துள்ளது.