பக்கம் எண் :

26கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

யான் உண்டனன்
யான் உண்டனென்இறந்தகாலம்
யான் உண்டேன்

யான் உண்ணாநின்றனன்
யான் உண்ணாநின்றனென்நிகழ்காலம்
யான் உண்ணாநின்றேன்

யான் உண்பன்
யான் உண்பென்எதிர்காலம்
யான் உண்பேன்

இங்கு, ‘அன்-என்-ஏன்’ என்னும் விகுதிகளை ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், மூன்று காலங்களிலும் இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன.

யான் தானினன்
யான் தாரினென்குறிப்பு வினைமுற்று
யான் தாரினேன்

இங்கு, ‘அன்-என்-ஏன்’ என்னும் மூன்று விகுதிகளையும் ஈற்றிலே உடைய தன்மை ஒருமைக்குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன.

இலக்கண விதி: கு-டு-து-று என்னும் குற்றியலுகர விகுதி களும், அல்-அன்-என்-ஏன் என்னும் நான்கு மெய்யீற்று விகுதிகளும் ஆகிய இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியிலே உடைய சொற்கள், இருதிணை யிடத்தனவாகிய ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் மூன்று பால்களுக்குப் பொதுவாகிய, தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றும், குறிப்புமுற்றுக்களும் ஆகும். (இவை இருதிணைப் பொதுவினைகளாகும்)

(தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள்)

(இருதிணைப் பொதுவினை)

உண்டனம்-உண்கின்றனம்-உண்பம்யாம்-
உண்டாம்-உண்கின்றாம்-உண்பாம்யானும் நீயும்