பக்கம் எண் :

250கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

யிருக்கின்றார். சான்றோரை மதிக்கின்ற மனப்பான்மை இவரிடம் இருந்தது எனபதற்கு இஃது ஒரு சான்றாகும். இனி, இவரிடம் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர் ஒருவர்க்குத் தமது நூலொன்றைக் காணிக்கையாக்கியுள்ளார்.

க. பிச்சையன் என்னும் பெயருடைய இளைஞர், பாவேந்த ரிடம் ஈடுபாடு கொண்டு, அவர்க்கு வேண்டிய பணிகளை மனமுவந்து செய்துவந்தார்; பாவேந்தர் நூல்களை அழகிய முறையில் கட்டடம் (Bind) அமைத்துக் கொடுப்பார் பாவேந் தர்க்குத் தமது நூல்களை அழகாக அச்சிடுவதிலும் அழகாகக் கட்டடம் செய்வதிலும் பேரார்வம் உண்டு. அதனால் பிச்சையனிடம் பாவேந்தர் அன்பு வைத்திருந்தார். பிச்சையன், இளமையிலேயே நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது. பாவேந்தர் இரங்கினார்; இளைஞர் எனப் பாராது, தம் நூலொன்றைப் பாவேந்தர் பிச்சை யனுக்குக் காணிக்கையாக் கினார். பெரியவர் சிறியவர் என்று வேறுபாடு கருதாது. அன்பு ஒன்றையே கருதிப் பாவேந்தர் அதற்குக் கட்டுப்பட்டு விளங்கினார்.

மறதியுள்ளம்

பாவலர்கள், எந்த நேரமும் நாட்டையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள்; வீட்டை மறந்து விடுவார்கள்; கற்பனை உலகில் திரிந்துகொண்டிருப்பார்கள்; இந்த உலகை மறந்துவிடு வார்கள்; சுருங்கக் கூறின் தம்மையே மறந்துவிடுவார்கள். தம்மை மறந்தநிலை, பாவேந்தர் வாழ்வீல் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. பாவேந்தர் ஒரு முறை ஒரு கல்லூரிக்குக் கவியரங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்; விடியற்காலையே வந்துவிட்டார். நிகழ்ச்சி மாலை யில்தான். அதுவரை இவர் ஓர் அறையில் ஓர் பலகையில் படுத்துக்கொண்டார். தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல், கையை மடக்கித் தலைக் கடியில் வைத்தவண்ணம் படுத்திருந்தார்.

இவரைக் காண வந்தவர்களிடம், கல்லூரியில் யாருமே தம்மைக் கவனிக்கவில்லை என்று இவர் வருத்தப்பட்டுக் கொண்டார். பாவேந்தருக்கு அருகில் ஒரு பெட்டியும். அதன்மேல் தலையணையுடன் கூடிய படுக்கையும் இருப்பதை வந்தவர்கள் சுட்டிக் காட்டினர். ‘அடடே! நான்தான் கொண்டுவந்தேன்; மறந்து விட்டேன்’ என்று கூறித் தலையணையை எடுத்து வைத்துக் கொண்டார். இத்தகைய வேடிக்கை நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் எவ்வளவோ நடை பெற்றிருக்கின்றன.