பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

இங்கே, ‘கும்-டும்-தும்-றும்’ என்ற விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிநிலை வினை முற்றுச் சொற்கள், தனித்தும், முன்னிலையையும் படர்க்கையை யும் உளப்படுத்தியும், இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும், இருதிணi பொது வினைகளாக வந்துள்ளன.

உண்டனம்
உண்டாம்யானும் அவனும்
உண்டனம்
உண்டாம்யானும் நீயும் அவனும்

இங்ஙனம், ‘அம்-ஆம்’ என்னும் விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மை வினை முற்றுச் சொற்கள், படர்க்கையை உளப்படுத்தியும், முன்னிலையையும் படர்க் கையையும் ஒருங்கு உளப்படுத்தியும் இருதிணைப் பொது வினைகளாக மயங்கி வருதலும் உண்டு.

இலக்கண விதி: அம்-ஆம் என்னும் இருவிகுதிகளை இறுதியாக உடைய சொற்கள் முன்னிலை யாரையும், எம்-ஏம்-ஓம் என்னும் விகுதிகளை இறுதியாக உடையசொற்கள் படர்க்கை யாரையும், கும்-டும்-தும்-றும் என்னும் விகுதிகளை இறுதியாக உடைய சொற்கள் முன்னிலை, படர்க்கை என்னும் ஈரிடத்தாரையும், தன்னடன் கூட்டும் உளப்பாட்டுத்தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களும், குறிப்பு வினைமுற்றுச்சொற்களு மாகும். இவை இருதிணைக்கும் பொதுவினைகளாகும்.

மேலும், பெயருடனே அன்றி, ‘உண்டு வந்தேன்’, ‘உண்டும் வந்தேம்’, என வினையுடன் முடியும் தன்மை ஒருமை - பன்மை வினைமுற்றுக்களும், ‘நீயும் அவனும் உண்டீர்’ என முன்னிலை யுடன் படர்க்கை கூடியபொழுது வரும் முன்னிலை வினை முற்றுக் களும், இருதிணைப் பொதுவினைகளேயாகும்.

(முன்னிலை ஒருமை வினைமுற்றுக்கள்)

(இருதிணைப் பொதுவினை)

உண்டனை-உண்டாய்-உண்டி(இறந்தகாலம்)
உண்கின்றனை-உண்கின்றாய்-உண்ணாநின்றி(நிகழ்காலம்) நீ
உண்பை-உண்பாய்-சேறி(எதிர்காலம்)