இங்கு, ‘ஐ-ஆய்-இ’ என்னும் மூன்று விகுதிகளையும் இறுதி யாக உடைய முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினை முற்றுச் சொற்கள், இருதிணைக்கும் பொதுவிணைகளாக வந்துள்ளன. வில்லினை - வில்லாய்-வில்லி (நீ) இங்கு, ‘ஐ-ஆய்-இ’ என்னம் மூன்று விகுதிகளையும் இறுதி யாக உடைய முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதிணைக்கம் பொதுவினைகளாக வந்துள்ளன. நட-வா-கேள்-அஃகு நடவாய்-வாராய்-கேளாய்-அஃகாய் நீ மேற்காட்டியவாறு விகுதி குன்றியும், குன்றாமலும் நிற்பன வாகிய இருபத்து மூன்று ஈற்று முன்னிலை ஏவலொரு மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களும் இருதிணைப் பொதுவினை களாகும். உண்ணல்-உண்ணேல்-மாறல் (நீ) இங்ஙனம், ‘அல்-ஏல்-ஆல்’ என்ற விகுதிகளை ஈற்றிலே உடைய எதிர்மறை ஏவலொருமை வினைமுற்றுச் சொற்களும் இருதிணைப் பொதுவினைகளாகும். இவ்வெதிர்மறை ஏவலொருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதி எனவும் வரும். அவையும் இருதிணைப் பொதுவினைகளாகும். இலக்கண விதி: ஐ, ஆய், இ என்னும் மன்று விகுதிகளை இறுதியில் உடைய சொற்களும், விகுதி குன்றியும், குன்றாதும் ஏவலிலே வரும் இருபத்து மூன்று ஈற்றுச் சொற்களும், ஒருவன், ஒருத்தி, என்று என்னும் மூன்று பால்களுக்கும் குறிப்பு முற்றுக்களும் ஆகம். (இவை இருதிணைப் பொதுவினை களாகும்.) (முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள்) (இருதிணைப் பொதுவினை) உண்டனிர்-உண்டீர் (இறந்தகாலம்) உண்கின்றனிர்-உண்கின்றீர் (நிகழ்காலம்)நீவிர் உண்பிர்-உண்பீர் (எதிர்காலம்) இங்கு, ‘இர்-ஈர்’ என்ற இரண்டு விகுதிகளையும் இறுதியில் உடைய முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றச் சொற்கள், இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. |