30 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
குழையினிர் - குழையீர் (நீவிர்) இங்கு, ‘இ-ஈர்’ என்ற இரண்டு விகுதிகளையும் இறுதியில் உடைய முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதிணைப்பொதுவினைகளாக வந்துள்ளன. உண்மின்-உண்ணீர்-உண்ணும் (நீவிர்) இங்கு, ‘மின்-ஈர்-உம்’ என்ற விகுதிகளை இறுதியில் உடைய முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்றுச் சொற்கள், இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. இலக்கண விதி: இர்-ஈர் என்ற இரண்டு விகுதிகளையும் இறதியில் உடைய சொற்கள் இருதிணைக்கும் பொதுவாகிய முன்னிலைப் பன்மைவினை முற்றும், குறிப்பு முற்றுமாகும். மின் விகுதியை இறுதியில் உடைய சொற்கள் முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்றாகும். (வியங்கோள் வினைமுற்றுக்கள்) (இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினை) வாழ்க வாழியஅவன்-அவள்-அவர்-அது-அவை வாழியர்யான்-யாம்-நீ-நீவிர் இங்கு, ‘க-இய-இயர்’ என்பவற்றை இறுதியிலே உடைய வியங்கோள் வினைமுற்றுச் சொற்கள், மூன்றிடங்களிலும், ஐம்பால் களிலும் வரும் பொதுவினைகளாகும். இலக்கணவிதி: க, ய என்னும் இரண்டு உயிர் மெய் களையும், ரகர ஒற்றினையும் இறதியாக உடைய வியங்கோள் வினைமுற்றுக்கள், மூன்று இடங்களிலும் ஐம்பால் களிலும் வரும். (வேறு-இல்லை-உண்டு) (இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினை) வேறு இல்லைஅவன்-அவள்-அவர்- அது- அவை உண்டுயான்-யாம்-நீ-நீவிர் |