‘வேறு - இல்லை-உண்டு’ என்ற மூன்று குறிப்பு வினை முற்றுச் சொற்கள், ஐம்பால்களிலும், மூன்று இடங்க ளிலும் வரும் பொது வினைகளாகும். நீ போதல் வேண்டும் சோறு உண்ணத்தகும் வஞ்சரை அஞ்சப்படும் மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள ‘வேண்டும்- தகும்-படும்’ என்ற சொற்கள் தேற்றப் பொருளில், ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாகிய பொதுவினைகளாக வரும். இலக்கண விதி: வேறு - இல்லை - உண்டு என்னும் மூன்று குறிப்பு வினைமுற்றுக்கள், ஐம்பாலுக்கும், மூவிடத்திற்கும் உரியன வாம். (பெயரெச்சவினை வினைக்குறிப்புக்கள்) (இருதிணைப் பொதுவினை) உண்ட-உண்கின்ற-உண்ணும்-சாத்தன் (வினைமுதல்) உண்ட-உண்கின்ற-உண்ணும்-கலம் (கருவி) உண்ட-உண்கின்ற-உண்ணும்-இடம் (நிலம்) உண்ட-உண்கின்ற-உண்ணும்-ஊண் (தொழில்) உண்ட-உண்கின்ற-உண்ணும்- நாள் (காலம்) உண்ட-உண்கின்ற-உண்ணும்-சோறு (செயப்படுபொருள்) மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘செய்த செய்கின்ற-செய்யும்’ என்னும் வாய்ப்பாட்டில் அடங்கும், அறுவகைப் பொருட் பெயர்களும், எஞ்ச நின்ற, ‘உண்ட-உண்கின்ற-உண்ணும்’ என்ற முக்காலப் பெயரெச்சங்களும் இருதிணைப் பொதுவினை களாகும். கரியகுதிரை, மக்கள் உண்ணாதமக்கள்,குதிரை இல்லாதபொருள், மக்கள் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் உள்ள ‘கரிய’ என்ற குறிப்புவினைப் பெயரெச்சமும் ‘உண்ணாத’ என்ற எதிர்மறைத் |