இங்ஙனம், கருத்தாவை மட்டும் உணர்த்திக் bழிலையும், காலத்தையும், பிறவற்றையும் வெளிப்படை யாக உணர்த்தாமல், குறிப்பால் உணர்த்துவன ‘குறிப்புவினை’ எனப்படும். அக் குறிப்பு வினை, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகப் பிறக்கும். குழையன்-பொருள் அடியாகப் பிறந்த குறிப்புவினை (குழைகாதணி) ஊரன்-இடம் அடியாகப் பிறந்த குறிப்புவினை ஆதிரையான்-காலம் அடியாகப் பிறந்த குறிப்புவினை செங்கண்ணன்-சினை அடியாகப் பிறந்த குறிப்புவினை கரியன்-பண்பு அடியாகப் பிறந்த குறிப்புவினை இன்சொல்லன்-தொழில் அடியாகப் பிறந்த குறிப்பு வினை. குறிப்பு வினைகளில், விகுதியினால் செய்பவன் (கருத்தா) மட்டுமே விளங்கும். ஏனைய குறிப்பாகவே விளங்கும். இலக்கண விதி: பொருள், இடம் , காலம் சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகத் தோன்றிச் செய்பவன் முதலாகிய ஆறனுள், செய்பவனாகிய கருத்தாவை மட்டும் வெளிப்படையாக விளக்குவது குறிப்பு வினையாகும். பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. (ந-நூற்பா 321.) (3) வினைச்சொற்களின் வகைகள் (தெரிநிலை வினைமுற்று) கண்ணகி வந்தாள் இங்கு, ‘வந்தாள்’ என்ற வினைச்சொல், பகுதியால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும், விகுதியால் திணைபாலையும் வெளிப்படையாகக் காட்டுகிறது. எனவே, வந்தாள் என்பது தெரிநிலை வினைமுற்றாகும். |