(குறிப்புவினையெச்சம்) மெல்லச் சென்றான் இங்கே, ‘மெல்ல’ என்பது தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தி, ‘சென்றான்’ என்ற வினைச்சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, ‘மெல்ல’ என்பது குறிப்பு வினையெச்ச மாகும். இங்ஙனம், குறிப்பு வினைமுற்று, குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் எனக்குறிப்பு வினை மூன்று வகைப் படும். இலக்கண விதி: மேலே கூறப்பட்ட தெரிநிலை குறிப்பு என்ற வினைச் சொற்கள், வினை முற்றும், பெயரெச்சமும், வினை யெச்சமும் ஆகித் திணைபால் இடங்களில் ஒன்றற்குச் சிறப்பாய் வருவனவும், பலவற்றிற்குப் பொதுவாய் வருவனவும் ஆகும். அவைதாம்- முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். (ந-நூற்பா 322) 3. இடைச் சொல் பண்டு காடுமன் - எமக்கு அருளமன் மற்று அறிவாம் - மற்று என்னை ஆள்க இங்கு, ‘மன்’ என்னும் இடைச்சொல் ‘காடு’ என்ற பெயர்ச் சொல்லுக்குப் பின்னும், ‘அருளும் ’ என்ற வினைச் சொல்லுக்குப் பின்னும் வந்துள்ளது. ‘மற்று’ என்னும் இடைச்சொல் ‘அறிவாம்’ என்ற வினைச் சொல்லுக்கு முன்னும், ‘என்னை’ என்ற பெயர்ச் சொல்லுக்கு முன்னும் வந்துள்ளது. இங்ஙனம், தனித்து இயங்காமல் பெயர் வினைகளைச் சார்ந்து, அவற்றின் முன்னும் பின்னும் அகத்துறுப்பாயும், புறத் துறுப்பாயும் ஒன்றும் பலவும் இடைசொற்கள் வரும். அவை, வேற்றுமை உருபுகள், இடைநிலைகளும் விகுதி களுமாகிய வினை உருபுகள், சாரியைகள், உவம உருபுகள், தத்தம் |