(2) அவன் உண்டான் உண்டான் (உண்+ட்+ஆன்) ட்-இடைநிலை, ஆன்-விகுதி. (3)அவற்றைத் தந்தான் அவற்றை (அவ்+அற்று+ஐ) அற்று-சாரியை (4)மயில் போல ஆடினாள் போல-உவம உருபு (5)அவன்தான் சொன்னான் தான்-தேற்றப்பொருள் (தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொல்) (6)ஏஎ இவள் ஒருத்தி ஏஎ-இசைநிறை (7)நாடாமால் ஊராமால் ஆல்-அசைநிலை (8)மழை சோவெனப் பெய்தது சோவென-ஒலிக்குறிப்பு நெஞ்சம் திடுக்கென நடுங்கியது திடுக்கென- அச்சக்குறிப்பு பொருக்கென எழுந்தான் பொருக்கென - விரைவுக்குறிப்பு இவை யாவும் எட்டுவகையினவாய் வந்த இடைச்சொற் களாகும். இனி, அகத்துறுப்பாயும் புறத்துறுப்பாயும் ஒன்றும் பலவுமாகப் பின்னும் முன்னும் வருவனவற்றைப் பார்ப்போம். குழையன் (குழை+அன்) இங்கு, ‘அன்’ என்ற விகுதியிடைச்சொல் மட்டும், பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளது. |