பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

நிலத்தினன் (நிலம்+த்+த்+இன்+அன்)

இங்கு ‘த்-இன்-அன்’ என முறையே இடை நிலையும், சாரியையும், விகுதியுமாகிய பல இடைச்சொற்கள் பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளன.

உண்ணாய் (உண்+ஆய்)

இங்கு ‘ஆய்’ என்ற விகுதியிடைச்சொல் மட்டும், வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளது.

நடந்தனன் (நட+த்(ந்)+த்+அன்+அன்)

இங்கு, ‘த்-அன்-அன்’ என முறையே இடைநிலையும், சாரியையும், விகுதியுமாகிய பல இடைச்சொற்கள் வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளன.

அதுமன் - கொன்னூர்

இங்கு , ‘மன்’ என்னும் இடைச்சொல்லும் ‘கொன்’ என் னும் இடைச்சொல்லும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறப்பாய்த் தனித்து வந்துள்ளன.

அது மற்றம்ம - இனி மற்றொன்று

இங்கு, ‘மற்று-அம்ம’ என்ற இடைச்சொற்களும், ‘மற்று-ஒன்று’ என்ற இடைச்சொற்களும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வந்துள்ளன.

வந்தானோ - ஐயோ விழுந்தான்

இங்க, ‘ஓ-ஐயோ’ என்ற இடைச்சொற்கள் வினையின் புறத்துறப்பாய்த் தனித்து வந்துள்ளன.

கொன்றான் கூகூ-சீசீ போ

இங்கே, ‘கூகூ’ என்ற இடைச்சொற்களும், ‘சீசீ’ என்ற இடைச் சொற்களும், வினைக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வந்துள்ளன.

தத்தம் பொருள் தரும் இடைச்சொற்கள் தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று என்பன போன்ற பல பொருள்களில் வரும்.