இனி, நன்னூல் (421) நூற்பாவுள் ‘இன்னன’ என்றதனால் வரும் இடைச்சொற்களைப் பார்ப்போம். அவன்-இவன்-உவன் அ-இ-உ சுட்டுப் பொருளைத் தருகின்ற இடைச்சொற் களாகும். எது-ஏது-யாது-அவனா-அவனோ எ-ஏ-யா-ஆ-ஓ வினாப்பொருளைத் தருகின்ற இடைச் சொற்களாகும். நக்கீரர் ந-சிறப்புப் பொருளைத் தருகின்ற இடைச்சொல்லாகும். இனிச்செல்வான் - இனி எம்மெல்லை ‘இனி’ என்பது கால இடங்களின் எல்லைப் பொருளைத் தரும் இடைச் சொல்லாகும். அறிதொறறியாமை சேரி தோறிது ‘தொறு-தோறு’ என்பன இடப்பன்மைப் பொருள்தரும் இடைச்சொற்களாகும். அந்தோ இழந்தான் அ ஆ என்ன உயரம் ‘அந்தோ,’ என்னும் சொல் இரக்கப்பொருளையும், ‘அஆ’ என்னும் சொல் வியப்புப் பொருளையும் தரும் இடைச்சொற் களாகும். வாளா இருந்தான் சும்மா இருந்தான் ‘வாளா-சும்மா’ என்பன பயனின்மைப் பொருளைத்தரும் இடைச் சொற்களாகும். இவை தவிர, இன்னும் வருவனவும் உள. இலக்கண விதி: ஐ முதலிய வேற்றுமை உருபுகளும், விகதிகளும் இடைநிலைகளுமாகிய வினை உருபுகளும், அன்-ஆன் |