பக்கம் எண் :

70கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

முதலிய சாரியை உருபுகளும், போலப் புரைய முதலிய உவம உருபுகளும், பிறவாறு தத்தமக்குரிய பொருளை உணர்த்தி வரு வனவும், வேறு பொருளின்றிச் செய்யுளில் இசைநிறைத் தலே பொருளாக வருவனவும், அசை நிலையே பொரளாக நிற்பனவும், வெளிப்படையான் வரும் இவை போலாது, ஒலி, அச்சம், விiவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருவனவும் என, எட்டுவகை யினை உடையவாய்த் தனித்து நடத்தலின்றிப் பெயரின் அகத்தும், வினையின் அகத்தும், அவற்றின் புறமாகிய பின்னும் முன்னம் ஆகிய இவ்விடங்கள் ஆறனுள் ஓரிடத்து ஒன்றேனும் பலவேனும் வந்து, அப்பெயர் வினைகளுக்கு அகத்துறுப்பாயும், புறத்துறுப் பாயும் ஒன்று பட்டு நடக்குந் தன்மையது இடைச் சொல்லாகும்.

வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள விசைநிறை யசைநிலை
குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப்
பெயரினம் வினையினும் பின்முன் னோரிடத்
தொன்றும் பலவும்வத் தொன்றுவ திடைச்சொல்.

(ந-நூற்பா 420.)

இலக்கண விதி: தெரிநிலையும், தேற்றமும், ஐயமும், முற்றும், எண்ணும், சிறப்பும், எதிர்மறையும், எச்சமும், வினாவும், விழைவும், ஒழியிசையும், பிரிப்பும், கழிவும், ஆக்கமும் இவை போல்வன பிறவும் தத்தம் பொருள என்ற இடைச்சொற்களின் பொருள்களாகும்.

தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப்
பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள்.

(ந-நூற்பா 421)

4. உரிச்சொல்

உறுமீன் வருமளவும்
சாலப் பேசினான்

இங்கு, ‘உறு’ என்னும் உரிச்சொல் ‘மீன்’என்னும் பெயர்ச் சொல்லைத் தழுவி வந்து, ‘பெரிய மீன்’ எனப் பொருள் தந்து, பெயரின்