பண்பை உணர்த்துகிறது. ‘சால’ என்னும் உரிச் சொல் ‘பேசினான்’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி வந்து, மிகுதியாகப் பேசினான் எனப் பொருள் தந்து, வினையின் பண்பை உணர்த்துகிறது. இங்ஙனம், பெயர்ச் சொல்லையும், வினைச்சொல்லையும் தழுவிவந்து, பல்வேறு வகைப்பட்ட பண்புகளைஸயம் உணர்த்தும் பெயராகி, ஒருகுணம் தழுவியும், பலகுணம் தழுவியும் செய்யுளுக்கே உரியனவாக வருஞ்சொல் உரிச்சொல் எனப்படும். பெயரைத் தழுவி அதன் பண்பை உணர்த்தும் உரிச்சொல் ‘பெயர் உரிச்சொல்’ என்றும், வினையைத் தழுவி அதன் பண்பை உணர்த்தும் உரிச்சொல் ‘வினை உரிச்சொல்’ என்றும் வழங்கப் படும். அவ் வுரிச்சொற்கள், ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றும், பல குணம் தழுவிய உரிச்சொல் என்றும் இரண்டு வகைப்படும். இலக்கண விதி:இசையும், குறிப்பும், பண்பும் ஆகிய பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி, அங்ஙனம் உணர்த்தும் பொழுது, ஒருசொல் ஒரு குணத்தை உணர்த்து வனவும், பலகுணத்தை உணர்த்துவனவுமாய்ப் பெயர் வினைகளை விட்டு நீங்காமல், செய்யுட்கு உரியனவாகிப் பொருட்க உரிமை பூண்டு வருவன உரிச்சொல் எனப்படும். பல்வகைப் பண்பும் பகர்பெயராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒரவா செய்யுட் குரியன வுரிச்சொல். (ந-நூற்பா 442.) (ஒருகுணந் தழுவிய பல உரிச்சொற்கள்) சாலச் சிறந்தது உறு புகழ் தவச்சேய் நாட்டார் நனி வருந்தினை துனி கூர் எவ்வம் கழி கண்ணோட்டம் |