இலக்கணவிதி: கடி என்னும் உரிச்சொல் காவலும், கூர்மை யும், வாசனையும் விளக்கமும், அச்சமும், சிறப்பும், விரைவும், மிகுதியும், புதுமையும், ஒலித்தலும், நீக்கலும், மணமும், கரிப்பும் ஆகிய பதின்மூன்று குணங்களிலும் வரும். கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்க மச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யார்த்தல் வரைவே மன்றல் கரிப்பி னாகும். (ந-நூற்பா 457.) பயிற்சி வினாக்கள் 1.தனிமொழியாவது யாது? 2.தொடர்மொழியாவது யாது? 3.பொது மொழியாவது யாது? சான்றுடன் விளக்குக. 5.மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் பெயர் எது? 6.ஆகுபெயராவது யாது? 7.பொருளாகு பெயரையும், குணவாகு பெயரையும் விளக்குக. 8.பொங்கல் உண்டான்; கார்த்திகை பூத்தது-இவைஎவ்வெவ் ஆகுபெயருள் அடங்கும்? 9.அன்மொழித் தொகை என்றால் என்ன? அஃது எத்தனை வகைப்படும்? 10.வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை க்குச் சான்று காட்டி விளக்குக. 11.அன்மொழித்தொகைக்கும் ஆகுபெயருக்கும் உள்ள வேறு பாட்டைக் கூறுக. 12.பொதுவினையாவது யாது? 13.இருதிணைப் பொதுவினைகளாக வருபவை எவை? 14.பாற்பொதுவினைகளாக வருபவை எவை? |