பக்கம் எண் :

74கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

15.உருபு மயக்கம் என்றால் என்ன? விளக்குக.

16.இறந்தகால இடைநிலைகள் எவை?

17.நிகழ்கால இடைநிலைகள் எவை?

18.எதிர்கால இடைநிலைகள் எவை?

19.இடைநிலைகள் தவிரக் காலங்காட்டும் வேறு உறுப்புக்கள்
எவை?

20.று-றும், கு-கும் என்ற விகுதிகள் எவ்வெக் காலங்களைக்காட்டும்.

21.செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுவிகுதி எவ்வெக்
காலங்களைக் காட்டும்?

22.எதிர்மறை ஆகார விகுதி எவ்வெக் காலங்களைக் காட்டும்?

23.புக்கான், தொட்டான்-இவற்றில் காலங்காட்டும். உறுப்பு எது?

24.சினைவினை, முதல்வினையைக் கொண்டு முடிவதைச்
சான்றுடன் விளக்குக.

25.ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் குறிப்பு
வினைமுற்றுக்கள் எவை? சான்றுடன் விளக்குக.

26.யார், எவன்-இக் குறிப்பு வினைமுற்றுக்கள் எவ்வெப்பால்
களுக்குப் பொதுவாக வரும்? சான்று தருக.

27.எல்லாவிடத்தும் வரும் அசைச் சொற்களில் எவையேனும்
பத்தை எடுத்தெழுக. அவற்றுள் எவையேனும் ஐந்திற்குச்
சான்று தருக.

28.பெயர்ச் சொல்லாவது யாது?

29.பெயர்ச் சொற்கள் எட்டு வேற்றுமை உருபுகளையும் ஏற்று
நிற்றற்கு ஒவ்வொர் சான்று தருக.

30.மூவிடப் பெயர்கள் எவை?

31.மூவிடப் பொதுப்பெயர் எது?

32.தெரிநிலை வினையாவது யாது? குறிப்பு வினையாவது யாது?

33.வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?