பக்கம் எண் :

96கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

அவற்றுள் சில வருமாறு:

யாது - யாவது என வருவது தோன்றல் விகாரமாகும்.

கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு என வருவது திரிதல் விகாரமாகம்.

யானை - ஆணை என வருவது நீளல் விகாரமாகும்.

பெயர் - பேர் என வருவது நீளல் விகாரமாகும்.

தசை -சதை என வருவது எழுத்து நிலைமாறுதல் விகாரமாகும்.

இவ்வாய் - வாயில் என வருவது சொல் நிலைமாறுதல் விகாரமாகம்.

இலக்கண விதி: மெல்லொற்றை வல்லொற்றாக்கலும், வல்லொற்றை மெல்லொற்றாக்கலும், குற்றறெழுத்தை நெட்டெழுத் க்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்க லும், இல்லாத எழுத்தை வருவித்தலும், உள்ள எழுத்தை நீக்கலும், செய்யுளிடத்து அடி, தொடை முதலானவைகளை நோக்கி அமைக்க வேண்டு மிடத்து வருவனவும் செய்யுள் விகாரமாகும்.

இலக்கண விதி: அடி, தொடை முதலானவைகளை நோக்கி, ஒரு மொழி ‘முதல், இடை, கடை’ என மூன்றிடத்தும் குறைந்து வருதலும் செய்யுள் விகாரமாகம்.

வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல்
விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. (ந-நூற்பா 155.)

ஒரு மொழி மூவழிக் குறைதலு மனைத்தே. (ந-நூற்பா 156.)

3.ணகர, னகர-யகர,ரகர,ழகர-லகர,ளகர

ஈற்றுப்புணர்ச்சி

(1) ணகர, னகர ஈற்றுப்புணர்ச்சி

(வேற்றுமை)

மண்+கலம்=மட்கலம்பொன்+கலம்=பொற்கலம்

மண்+குடம்= மட்குடம்பொன்+குடம்=பொற்குடம்

இவ்வாறு, வேற்றுமையிலே வல்லினம்வரின், ணகர னகர ஈறுகள் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும்.