பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 153 |
கூறுகையில், ‘சாத்தனார் கூட மணிமேகலையின் அழகைக் குறிப்பிடும் போது, ‘ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?’ எனக் கூறுகிறார். அது நமக்குச் சற்றுத்தூய்மைக் குறைவாகவே படுகிறது; ஆனால் பூங்கொடியின் எழில் சுட்டப் படும் இடங்களில், தூய்மை மேலோங்கி நிற்பதைத் காணுகிறோம்’ என எடுத்து மொழிந்தார். திரைப்படத்துறையில் ஈடுபட்டிருந்த வெ.தருமராசன் என்ற என் நண்பர், தமது செலவில், சென்னையில் பூங்கொடி வெளியீட்டு விழா வொன்று நடத்தினார். விழாவின் தலைவர் செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார். பன்மொழிப்புலவர் கா.அப்பா துரையார், முனைவர் மு.வரதராசனார், முனைவர் மா.இராசமாணிக் கனார், தமிழ் நெறிக் காவலர் மயிலை, சிவ.முத்து, தமிழண்ணல், க.த.திருநாவுக்கரசு முதலான சான்றோரும் பேராசிரியர் க.அன்பழகன், சட்டமன்றப் பேரவைத் தலைவர் செல்லப் பாண்டியன் போன்ற அரசியல் தலைவர் களும் விழாவிற் கலந்து சிறப்புரையாற்றினர். தலைவர் முதல் அனைவரும் பூங்கொடிக் காப்பியத்திற் பேரீடு பாடு கொண்டு பேசினர். மு.வ. 103 ‘டிகிரி’ காய்ச்சலுடன் வந்து, உயிர்ப்பான இடங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டினார். பேராயக் கட்சியினரான செல்லப்பாண்டியன், பொன்னாடை போர்த்து விட்டுக் காப்பியத்தில் வரும் கலப்பு மணத்தை வலியுறுத்திப் பேசினார்; அரசின் விடுதலை ஆணையைப் பொருட்படுத்தாது, தானே, உயிர் விடுதலை பெற்ற பூங்கொடியைப் பாராட்டினார். இறுதியில், ‘நம் தமிழுக்குக் குழப்பம் விளைவிக்கும் எந்த மொழியா யினும் அதனை யெதிர்த்துப் போரிட வேண்டியது கடமைதான்’ என்று வலி யுறுத்திப் பேசினார். இக்காப்பியம் இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்டதே; எனினும் ஓரிடத்திற் கூட ‘இந்தி’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக அயல் மொழி, பிறமொழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தந்திருந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பெரியவர், தாமரைச் செல்வர், வ.சுப்பையா பிள்ளை, தாம் நடத்தவிருக்கும் நீலகேசிக் காப்பிய வெளியீட்டு விழாவிற் பாராட்டுச் செய்யக் கருதி என்னையழைத்தார். விழாத் தலைவர், பேராசிரியர் |