100 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
அன்பு, விழிகளின் வழியே வெளிப்பட்டுவிடும் என்ற உண்மையை நீ உணர்ந்துகொள்ள வேண்டும். அன்பிற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. அன்பு, பொது நலத்தைப் பேணி வளர்க்கும்; அன்பின்மை, தன்னலத்தையே போற்றிக் காத்து வளர்க்கும். அன்புடையார், பிறர்க்குப் பயன்படுவர்; அன்பிலார் தமக்கே பயன்படுவர். மற்றவர்க்குப் பயன்பட விழைவோர், உடல், பொருள், உயிர் மூன்றாலும் பிறர்க்கே உரியராவர். தமக்கே பயன்பட வாழ்வோர் எல்லாம் தமக்கே உரியராவர். சிபிச் சக்கரவர்த்தியின் கதை உனக்குத் தெரியுமல்லவா? அவர் ஒரு புறாவுக்காகத் தன் சதையை அரிந்து தந்தார் என்பதைப் படித்திருக் கிறாய். ததீசி முனிவர் என்பவர், இந்திரனுக்குத் தம் முதுகெலும்பைக் கொடுத்தார் என்று திருவிளையாடற்புராணங் கூறுகிறது. இவ்விரு நிகழ்ச்சிகளும் அன்புடையார், எவ்வகைத் தியாகமுஞ் செய்யத் தயங்கார் என்ற உண்மையைக் காட்டுகின்றன. நட்பு, உலகத்தில் மிகச் சிறந்த ஒரு பண்பாகும். அப்பண் பினை அன்பொன்றே தரவல்லது. யாவரிடத்தும் நீ அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால் பகைவனும் பகைமை பாராட்டாமல், நண்பனாக மாறி விடுவான். அயலவராக இருப்பவரும் உன்பால் நண்பு கொள்ளவே விரும்பி வருவர். ஆதலின் உனக்குத் தீங்கு செய்தாரிடத்தும் அன்பு காட்டு. பகைமைக்கே இடமில்லாமற் போய்விடும். பகையை வெல்வதற்கு, அன்பைப் போன்ற சிறந்த கருவி வேறொன்றில்லை. குடும்ப வாழ்க்கைக்கு, அன்பு எவ்வாறு இன்றியமையாது வேண்டப்படுகிறதோ, அதைப் போலவே சமுதாய வாழ்க்கைக்கும் அன்பு கட்டாயம் வேண்டப்படுவதாகும். மாந்தர், ஒருவருக் கொருவர் அன்பு செலுத்திக் கூடி வாழக் கற்றுக் கொண்டாலன்றிச் சமுதாயம் என்ற பெயர் பொருந்தாது. விலங்குகளுக்கும் மாந்தருக்கும் உள்ள வேறுபாடு இதுதான். விலங்குகள் கூடி வாழக் கற்றுக் கொள்ளத் தெரியாதவை; அவ்வாறு வாழ்வதற்குரிய அன்பை அறியாதவை. ஆயினும், அவற்றும் சில இனங்கள் கூடி வாழ்வதையுங் காண்கிறோம். கூட்டு வாழ்க்கைக்கு அன்பே சிறந்த துணையாகும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையுஞ் சிறந்து விளங்க வேண்டு மானால், அன்பு அவர்கள் வாழ்க்கையைப் பற்றிப் பிணைந்திருக்க வேண்டும். அன்பில்லாத வாழ்க்கை என்றுமே சிறக்காது. வலிய |