அன்புதான். குஞ்சுகளுக்கு இரை தேடித் தரும் கோழியைக் கண்டிருப்பாய். பச்சிளங் குருவிகளுக்கு இரை யூட்டும் பறவை யினங்களைப் பார்த்திருப் பாய். அம்மாவென் றோலமிட்டு, அங்கு மிங்கும் துள்ளி வரும் கன்றுகளைக் கண்ட வுடன், பால்சுரந்தூட்டும் பசுக்களைப் பார்த்திருப்பாய். இவற்றின்பால் நீ காண்பதென்ன? அன்பென்னும் பண்பல்லவா? அஃறிணையாயினும், உயர்திணையாயினும் அன்பிற்ககப் படாதவுயிரில்லை. அஃறிணையுயிர்களிடத்திலும் அன்பு துளிர் விட்டுக் காணப்படுவதாயின், உயர்திணையாம் மாந்தரிடம் அவ்வன்பு செழித்து வளர வேண்டாவோ? உலகில் பிறந்த ஒவ்வொரு வரிடமும் அன்பு அரும்பி, மலர்ந்து, மணம் பரப்ப வேண்டு மல்லவா? அன்பைத் துணையாகக் கொண்டு வாழ்பவன்தான் மனிதன் என்று சொல்லப்படுவான்; உயிருள்ள மனிதனென உரைக்கப் படுவான். அன்பினைத் துறந்து திரிபவன், மனிதனென மதிக்கப்பட மாட்டான்; உயிரற்ற உடலாக - எலும்புந் தோலும் போர்த்த உருவமாக எண்ணப் படுவான். ஆதலின் ஒருவர், மற்றவர்பால் அன்புடையராகி ஒழுகுதல் வேண்டும். இவ்வன்பு கண்ணுக்குப் புலனாகும் பொருளன்று. கட்புலனா காப் பொருள்களுள் ஒன்றாகும். அவ்வாறாயின், அன்பின் இருப்பை எவ்வாறு புரிந்து கொள்வது? என நீ வினவலாம். அவரவர் செய்யுஞ் செயல்களே அன்பின் இருப்பை வெளிப்படுத்திக் காட்டிவிடும். எவருமே தம்முள்ளத்துள் அன்பை அடைத்துப் பூட்டி வைத்துவிட முடியாது. தம்மால் விரும்பப்பட்டவர் துன்புறுவதைக் காணும் பொழுது, அன்புடையார் கண்களில், தானே நீர் அரும்பித் ததும்பு வதைக் காண்கிறோம். உள்ளத்துள் மறைந்து கிடந்த அன்பை, விழி சிந்தும் நீரே பலரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தி விடுகிறது. நம் பக்கத்து வீட்டிலிருந்த உடன் பிறந்தார் இருவரும், பாகப் பிரிவினை காரணமாகப் பகைமை கொண்டு, தனித்தனியே பிரிந்தனர். அவ்விருவரும் இனி ஒன்றுபடப் போவதில்லை என ஊரார் கூறுமளவுக்கு வேறாகி நின்றனர். ஆயினும் ஒருநாள், இளையோன் கடனுக்கு ஆளாகிச் சிறைப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டுக் கண் கலங்கித் துடிதுடித்து நம் இல்லத்திற்கு மூத்தவர் ஓடி வந்ததைப் பார்த்தாயல்லவா? அதனால் அன்புடையார் நெஞ்சத்துட் பகைமை பூத்திருந்தாலும், அதற்கும் அடியில் புதைந்து கிடக்கும் |