பக்கம் எண் :

102கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

3
இணக்கம் அறிந்து இணங்கு

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உனக்கு என் வாழ்த்து.

முன் எழுதிய கடிதத்தில் அன்பு, நட்பை உண்டாக்குவதற்குச் சிறந்த துணையாகும் என எழுதியிருந்தேன். நீயும் அதன் வண்ணம் ஒழுகிப் புதிய நண்பர்களைப் பெற்றுள்ளதாக எழுதியிருக்கின்றாய். அது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அதனால் நட்பைப் பற்றி இக்கடிதத்தில் எழுத விரும்புகிறேன்.

மனிதன் தனக்கென்று தேடிக்கொள்ள வேண்டிய பொருள்கள் பலவுள்ளன. அவற்றுள், தலையாயது நட்பு ஒன்றேயாகும். அதைப் போலச் சிறந்ததாகக் கருதுவதற்கு ஒன்றுமே இல்லை என்னலாம். நட்பு, ஒருவனுடைய வாழ்விலே அரியதொரு காவலாக அமைந்து விடுகிறது. அதைவிடச் சிறந்த காவலாக அமையும் பொருள் வேறில்லை. 'உயிர் காப்பான் தோழன்' என்னும் பழமொழியை இங்கு உனக்கு நினைவுறுத்தக் கருதுகின்றேன். இத்தகு நட்பின் சிறப்புகள் யாவை? உண்மை நட்பின் தன்மை யாது? எத்தகைய நட்பு வேண்டற்பாலது? எத்தகைய நட்பு விலக்கற்பாலது? என்பன பற்றி எழுதினால், நீ இணக்கம் அறிந்திணங்க ஏதுவாக இருக்கும்.

ஒரு நல்ல நூலைக் கற்கும்பொழுது இன்பம் விளைகிறது. மறுமுறை அதனைக் கற்கும்பொழுது மேலும் இன்பம் விளைகிறது. மீண்டும் பயில்கின்றோம்; புதிய இன்பம் உண்டாகிறது. பயிலுந் தோறும் பயிலுந்தோறும் நூல், புதுப்புது இன்பத்தைத் தந்து கொண்டேயிருக்கிறது. அதைப் போலவே நற்பண்பு களைக் கொண்டே நல்லோருடைய நட்பு, பழகப் பழக இன்பஞ் செய்து கொண்ட இருக்கும். ஒருவனுக்கு ஆடை குலைந்த பொழுது,