பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

4
உண்மை விளம்பு

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் பெற்றேன். மகிழ்ச்சி. நீ நண்பர்களிடம் அன்பாகப் பழகுவதாகவும், அவர்கள் உன்னிடம் அன்பாகப் பழகுவதாகவும் எழுதியிருக்கிறாய். நல்ல நண்பர்களென்றுங் குறித்திருந்தாய். அவ்வன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். போலியன்பாக இருத்தல் கூடாது. பொதுவாக எதிலுமே போலி கூடாது. உண்மையின் ஒளியே வேண்டும். உள்ளத்தில் ஒளியுண் டாயின் வாக்கினிலும் செயலிலும் ஒளியுண்டாகும்.

உண்மை, மனிதனை மேலும் மேலும் உயர்த்துகிறது; பொய்ம்மை, அவனைப் படுகுழியில் வீழ்த்தி விடுகிறது. இதனைப் பல வரலாறுகளும் கதைகளும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இலக்கியச் சான்றுகள் ஒருபுறமிருக்க, நம் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நோக்கினால் இது நன்கு புலனாகும். நமக்கு விடுதலை தேடித் தந்த காந்தியடிகள் நம் நாட்டு மக்களாற் போற்றப்படுவதோடன்றி, உலகத்து மக்கள் அனைவராலும் பாராட்டப் படுகின்றார். நாடு, மொழி, சமயம், கட்சி என்ற வேற்றுமைகளையும் கடந்து பாராட்டப்படுகின்றார். அவர்தம் நெஞ்சங்களில் நிலைத்த இடத்தையும் பெற்று விளங்குகின்றார். காரணம் என்ன? அவர், உண்மையைக் கடைப்பிடித்து ஒழுகியதாற்றான் அந்நிலையினை எய்தினார்.

காந்தியடிகளின் சொல்லில் உண்மை சுடர்விட்டது; செயலில் உண்மை செறிந்து விளங்கியது; இவற்றினும் மேலாக உள்ளத்திலும் உண்மை ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. உள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய காரணத்தால் அவர், உலகத்தார் உள்ளத்திலெல்லாம் உறையும் தகுதி பெற்றார். 'உண்மையே கடவுள்' என்ற கோட் பாட்டிற் சிறிதேனும் பிறழாது வாழ்ந்து வந்தார். உள்ளத்தில்