பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்111

மற்றவனுடைய உதவியின்றி வாழ முடியாத சூழ்நிலையைப் பெற்றான். ஆதலால் ஒவ்வொருவனும் பிறருக்குத் தன்னால் இயன்ற உதவி செய்து வாழ வேண்டும் என்ற உளப்பாங்குடைய வனாகத் திகழ்ந்தான். இவ்வாறு ஒருவர்க்கொருவர் உதவும் பண்பைத்தான் ஒப்புரவு என்று கூறினர்.

ஒப்புரவு என்னுஞ் சொல்லின் பொருளைக் கூர்ந்து நோக்குங் கால், அச்சொல்லின் அருமை பெருமைகள் நன்கு புலனாகும். நம் முன்னோர், எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து, அச்சொல்லைப் படைத் துள்ளனர் என்பதையும் அறியலாம். தன்னைப் போலப் பிறரையும் ஒப்பாக - ஒன்றாகக் கருதி வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது அச்சொல். வாழ்வு, செல்வம், இன்பம் முதலிய நலங்களைத் தான் எவ்வாறு நுகர எண்ணுகின்றானோ அவ்வாறே பிறரும் அவற்றை நுகர வேண்டும் என்று, ஒப்ப நோக்கி வாழ்வது தான் ஒப்புரவு. பிறரையும் ஒப்பாகக் கருதும் தன்மைத்தாகிய ஒப்புரவென்னுஞ் சொல்லுக்கு வேளாண்மை என்ற பிறிதொரு பெயரும் உண்டு. உழவுத் தொழி லையும் வேளாண்மை என்று சொல்லுகிறோம். அத்தொழில் செய் வோனை வேளாளன் என அழைக்கிறோம். உழவுத் தொழில் அவனுக்காக மட்டுஞ் செய்யப்படுவதன்று; ஊருக்காக - உலகுக் காகச் செய்யப்படுவது. ஏர் நடக்காவிடின் பார் நடக்காது. ஆதலின், உலகுக்குதவியாக விளங்குந் தொழிலை வேளாண்மை எனவும், ஊருக்கெல்லாம் உதவியாக இருப்பவனை வேளாளன் எனவும் அழைக்கின்றோம். ஒப்புரவு, வேளாண்மை என்னும் பண்டைத் தமிழ்ச் சொற்கள் உணர்த்தும் நாகரிகத்தை - பண்பாட்டை நினைந்து, நினைந்து வியந்து வியந்து, பாராட்டத் தோன்றுகிறது. இப்பண்புதான் இன்று உலகெங்குஞ் சமதர்மம் என்று பேசப் படுகிறது.

இயல்பாக வாய்த்திருந்த இப்பொதுநலப் பண்புதான், அறிவு மேம்பாடுற்றுள்ளதாகக் கூறப்படும் இக்காலத்தில், அருகிக் கொண்டே வந்து, தன்னலமே கருதுந் தனிப் பண்பாக மாறிவிட்டது. ஆதி மனிதனாக மாறிவிட்டான் மனிதன். ஆதலின், அவனுக்கு அடிக்கடி இப்பண்பை நினைவூட்ட வேண்டியுளது; வற்புறுத்திச் சொல்ல வேண்டி வருகிறது. இயற்கைப் பண்பைச் செயற்கையாக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது. ஒவ்வொருவனும்