பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

பிறருக்கு உதவியாக வாழவேண்டுவது கடமை, இயல்பு, மனிதத் தன்மை என்ற உணர்வையே மறந்துவிட்டான்.

ஒப்புரவு, கைம்மாறு கருதிச் செய்யப்படுவதன்று,தன் கடமை களுள் ஒன்றென்றுணர்ந்து, விரும்பிச் செய்யத் தக்கது. மனிதனுக்கு வேண்டிய கடமைகளுள் இதுவும் ஒன்றாகும் என்பதைத் தெளி வுறுத்தவே அதனைக் 'கடப்பாடு' என வள்ளுவர் குறித்தனர். மேகம் மழை பொழிகிறது; மழையின் நீரால் உலகுக்குதவி, அதனைக் காத்தல் செய்கிறது. அது, கைம்மாறு கருதியா மழை பொழிகிறது? குளிர்ந்ததும் தன்னியல்பில் பொழிந்து செல்கிறது. அதைப் போலவே மனிதனும் கைம்மாறு கருதி ஒப்புரவாற்றுதல் கூடாது. மனங் குளிர்ந்து - அன்பால் உருகி, இயல்பாக உதவியொழுக வேண்டும். பறம்புமலையாண்ட பாரி, வாரி வாரி வழங்கி, உலகைக் காத்தான்; கைம்மாறு கருதியா அதனைச் செய்தான்? முல்லைக் கொடிக்குத் தேரை விட்டுச் சென்றானே, கைம்மாறு கருதியா அவ்வாறு செய்தான்? அப்பண்பு, அவனுக்கு இயல் பாகவே அமைந்து கிடந்தது. இயல்பாகக் கடமையாற்றுந் தன்மையினால், உலகு புரக்குந் தொழிலிற் பாரியையும் மாரியையும் சேர்த்துக் கூறினர் புலவர்.

மனிதன் அரும்பாடுபட்டுப் பொருளைத் திரட்டுகிறான். அல்லும் பகலும் உழைக்கிறான்; அலைகடல் கடந்து பறக்கிறான். இவ்வாறு செல்வத்தைத் தொகுப்பது, தனக்காக வோ வறிதே வைத்திருப்பதற்காகவோ அன்று. உலகுக்காகவும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதற்காகவும் தான் முயன்று தேடிய பொருள் பயன்பட வேண்டும். சிலர், தாம் ஈட்டிய ஒண் பொருளைக் கல்வி நிலையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் வழங்கு வதைக் காணுகின்றோம். அந்நிலையங்களும் மனைகளும் உலகுக்குத் தானே பயன்படு கின்றன. இவ்வாறு உலகுக்குதவுவது தான் ஒப்புரவெனப்படும். செல்வத்தால் மட்டுமின்றி, உடலுழைப்பாலும் வாய் மொழியாலும் ஒப்புரவு செய்து வாழலாம்.

வள்ளுவர் உலகப் பேரறிஞர்; ஒப்பற்ற வழிகாட்டி; குண மென்னுங் குன்றேறி நின்றவர்; வெகுளியை வேண்டா வென்று வெறுப்பவர்; அக்குணக் குன்றுக்குக் கூட, ஒப்புரவறிந்து வாழாதவனை நினைந்து விடின் சீற்றம் வந்து விடுகிறது. ஒப்புர