பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்113

வறிந்து வாழாதவன், செத்தவருள் ஒருவனாகக் கருதப் படுவான் எனச் சினந்து கூறிவிடுகிறார். அதனையறிந்து வாழ்பவனே உயிருடன் வாழ்பவனாவான் என மொழிகின்றார். உயிருள்ளவன் செயல் ஒப்புரவறிதல். அஃதின்றேல் அவனை உயிருள்ளவன் என்று எவ்வாறு கூறமுடியும்?

ஊருணி, பயன்மரம், மருந்துமரம் ஆகிய இம்மூன்றும் ஒப்புரவாளனுக்குவமையாக வள்ளுவராற் கூறப்படுவது, கருத்திற் கொள்ளத்தக்கதாகும். மழை பொழிகிறது; ஊருணியில் நீர் நிறைகிறது; அது பாழாகாது, நெடுங்காலம் நின்று, எல்லார்க்கும் தப்பாது பயன்படுகிறது. அதுபோல, அவன் பாடுபடுகிறான்; செல்வங் குவிகிறது; அச்செல்வம் பாழாகாமல், நெடிது நின்று, அனை வருக்குந் தவறாது பயன்பட வாழ்கிறான் என்பது கருத்து. பயன் மரம் ஊரின் நடுவே பழுத்து நின்று, எல்லார்க்கும எளிதிற் பயன் கொடுக்கிறது. ஒப்புரவாளனும் மாந்தரிடையே செல்வங் கொழித்து நின்று, அனைவர்க்கும் எளிதில் உதவும் பண்புடையவனாக இருந்து வாழ்கிறான். மருந்து மரம், எளிதிற் கொள்ளுமிடத்தே நின்று, மறைவிடத்தில் நில்லாது வெளிப்பட நின்று, காலத்தால் வேறு படாது நின்று பயன்தருகிறது; வெட்டினாலும் முறித்தாலும் தன்குறை நோக்காது, வேர், பட்டை, இலை, பூ முதலிய எல்லா உறுப்புகளாலும் பயன்தருகிறது. அதுபோல ஒப்புரவாளனும் பிறர் எளிதில் உதவி பெறும் வகையில் நின்று, காட்சிக் கெளியனாகி, வறுமையினும் வேறுபடாது என்றும் பயன்பட வாழ்கிறான்; பிறர், இடர்தரினும் இழிமொழி கூறினும் அக்குறை நோக்காது, உடல், பொருள், உயிர் ஆகிய அனைத்தாலும் பயன்பட வாழ்கிறான்.

தாம் செய்யத்தக்க கடமைகளை யறிந்த நல்லறிவாளர். செல்வஞ் சுருங்கி, வறுமையுற்ற காலத்தும் ஒப்புரவு செய்வதிலே தளரமாட்டார். செல்வம் ஒழியினும், உழைப்பாலும், பிறவற்றாலும் பிறர்க்கு உதவியாக இருப்பர். புலவர்க்கெல்லாம் உதவியாக நின்ற குமணன், நாடிழந்து, செல்வமிழந்து, காட்டில் வாழும்போதும் தன்னை நாடிவந்த புலவருக்குத் தன் தலையைக் கொடுக்க முன் வந்ததை ஈண்டு நினைவு கொள்க.

ஒப்புரவாளன் ஒருபோதுங் கெடுவதில்லை. கேடுவரு மெனினும் தன்னை விற்றாவது அக்கேட்டினை ஏற்றுக் கொள்ள வேண்டு