114 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
மென்பது வள்ளுவத்தின் வாய்மொழி. ஒப்புரவினால் வருங் கேடு, கேடாக மதிக்கப்படுவதில்லை; உயர்ந்த புகழுக் குரியதாகவே கருதப்படும். ஆதலின், ஒப்புரவறிதல் கடமை யென்றுணர்ந்து, கைம்மாறு கருதாது, வேளாண்மை செய்து, வறுமைக் காலத்தும் வழுவாது நின்று உலகுக்குதவியாக வாழ்வாயாக. "தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு". இங்ஙனம் அறிவுடை நம்பி. |