பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்123

திரு.வி.க., மறைமலையடிகள், உ.வே.சாமிநாதைய்யர் போன்ற பெருமக்கள் எப்பொழுது புத்தகத்தைக் கீழே வைத்தார்கள்? இறுதிவரை புத்தகமுங் கையுமாகவே விளங்கினார்கள். அதனால் உயர்ந்தார்கள். நம்மையும் உயரச் செய்தார்கள். இத்தகைய சான்றோர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு நீயும் உயர்வாயாக.

"விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்"

இங்ஙனம்
அறிவுடை நம்பி.

